14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்த வெளிநாட்டு முதலீடு
6 May 2026, 8:44 pm

14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்த வெளிநாட்டு முதலீடு

புதுதில்லி இந்திய உள்நாட்டுப் பங்குச்சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் (FPIs) முதலீடு பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. 2026 மார்ச் நிலவரப்படி, இது 16.13 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த அளவாகும்.

2025 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 18.9 பில்லி யன் டாலர் முதலீட்டை வெளிநாட்டு முதலீட்டா ளர்கள் திரும்பப் பெற்றனர். 2026 மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டுமே 20.5 பில்லியன் டாலர் முதலீடு இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளது.

2026 ஏப்ரல் வரை வெளிநாட்டு முத லீட்டாளர்கள் சுமார் ரூ. 1.68 டிரில்லியன் மதிப்பி லான பங்குகளை விற்றுள்ளனர். இது முந்தைய முழு ஆண்டுகளில் நடந்த விற்பனை யை விட அதிகமாகும்.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமை யாக உயர்ந்துள்ளது. எரிசக்தி இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் இந்தியாவிற்கு, இந்த விலை உயர்வு நிதிப்பற்றாக்குறையை அதிகப் படுத்தியுள்ளது. இதன் விளைவாக பணவீக்கம் அதிகரித்துள்ளதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலால் ஏற்பட்ட பொருளாதாரத் தயக்கம் காரணமாகவே வெளிநாட்டு முத லீட்டாளர்கள் இந்தியச் சந்தையிலிருந்து தங்கள் முதலீடுகளைத் தொடர்ந்து வெளியேற்றி (திரும்பப் பெற்று) வருகின்றனர்.