காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு
18 Dec 2025, 5:31 pm
<p><strong>காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு</strong></p>
<p>தருமபுரி, டிச.18- காப்பீட்டுத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டைக் கண்டித்து, எல்ஐசி ஊழி யர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். காப்பீட்டுத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டை 100 சதவிகிதம் அனுமதிக் கும் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியு றுத்தி எல்ஐசி ஊழியர் சங்கத்தினர் வியா ழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங் கத்தின் கிளைத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் சேலம் கோட்ட இணைச்செயலாளர் சந் திரமௌலி, முதல்நிலை அதிகாரிகள் சங்க தலைவர் வெங்கட்ராமன், வங்கி ஊழியர் சங்க தலைவர் ராமமூர்த்தி, ஓய்வூதியர் சங்க கோட்ட இணைச் செயலாளர் ஏ.மாதேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை - திருச்சி சாலையில் உள்ள எல்ஐசி தலைமை அலுவ லகம் முன்பு வங்கி மற்றும் இன் சூரன்ஸ் ஊழியர் கள், அதிகாரிகள் என அனைத்து தொழிற்சங்கத்தி னர் கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடு பட்டனர். வங்கி ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகி சயது இப்ராஹிம் தலைமை வகித்தார். இன்சூரன்ஸ் சங்க அகில இந்திய இணைச் செயலாளர் எம். கிரிஜா, தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செய லாளர் வி.சுரேஷ், இந்திய வங்கி ஊழி யர் சம்மேளன மாவட்டச் செயலாளர் ஆர்.மகேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
