முந்தய பக்கம்

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்தக் கூடாது முகவர்கள் சங்க மாநாடு தீர்மானம்

22 Dec 2025, 4:47 am
இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்தக் கூடாது முகவர்கள் சங்க மாநாடு தீர்மானம்
<p>திருவண்ணாமலை, டிச. 22- &nbsp;இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்தக் கூடாது என எல்ஐசி முகவர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிகாய்) கிளை மாநாடு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் நடைபெற்றது. கிளை தலைவர் கதிரவன் தலைமை தாங்கினார். கிளை மேலாளர் அன்பரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கோட்ட பொதுச்செயலாளர் எஸ். ரமேஷ் துவக்க உரையாற்றினார். கிளைச் செயலாளர் அசோக் வேலை அறிக்கையும், பொருளாளர் கன்னியப்பன் நிதிநிலை அறிக்கையும் வாசித்தனர். சிஐடியு மாவட்ட இணை செயலாளர் வே. சங்கர், மாநில செயலாளர் டி. வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினர். மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ. கலாம் நிறைவுறையாற்றினார். இந்த மாநாட்டில், எல்ஐசி முகவர்களுக்கு பழைய கமிஷன் முறையை திரும்ப நடைமுறைப்படுத்த வேண்டும், ஒன்றிய அரசு எல்ஐசியின் பங்குகளை விற்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram