ஆரவல்லி மலைத் தொடரையே காலி செய்யும் முயற்சிக்கு
30 Dec 2025, 4:07 pm

தொடர்கிறது

ஆரவல்லி மலைத் தொடரையே காலி செய்யும் முயற்சிக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையிலும், தங்கள் சீர்குலைவு வேலை

களை பாஜக தொடர்கிறது. புதிய தகவல்கள் அம்பலமாகி

யுள்ளன. கடந்த ஏப்ரலில் பாஜக மாநில அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களில் பண்ணை வீடுகள்,

கேளிக்கை விடுதிகள் எல்லாம் அமைக்க அனுமதி அளித்துள்ளார்கள். கனிமங்கள் எடுப்பது மட்டுமில்லாமல், மலைத்தொடரையே விற்று விடும் முடிவில் இருக்கிறார்கள். விவசாயிகள், இடதுசாரிகள் எதிர்ப்பு

பெரிதாக இருக்காது என்று நினைத்த காங்கிரஸ், மக்க

ளின் ஆதரவைக் கண்டு களத்தில் குதித்துவிட்டது. பின்வாங்குவதாக பாஜக மாநில அரசு காட்டிக் கொண்டாலும், பெரு நிறுவனங்களிடமிருந்து வந்துள்ள, வரப்போகும் நிதி அவர்களை சீர்குலைவை நோக்கியே தள்ளுகிறது.

குழப்பம்

மகாராஷ்டிர மாநில உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு பெரிய கூட்டணிகளுமே ஓட்டை, உடைசல்களாக மாறியுள்ளன. தனது இளைய கூட்டாளிகளுக்கு இடங்களை ஒதுக்காமல், சொன்னதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பாஜக சொல்வதற்கு கூட்டணிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. எதிர்க்கட்சி கூட்டணியிலோ, ஆளாளுக்கு விருப்பப்பட்ட திசையில் நகர்கிறார்கள். மும்பையில் ராஜ் தாக்கரேயின் நவநிர்மான் சேனாவைச் சேர்த்துக் கொண்டு மற்ற கட்சிகளை தள்ளி நிறுத்தும் வேலையில் உத்தவ் தாக்கரே இருக்கிறார். புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாத் நகரவைகளில் மட்டும் குடும்பமாக ஒன்று சேர்கிறோம் என்று சரத் பவார்-அஜித் பவார் கைகோர்க்கிறார்கள். ஒற்றுமையைக் காப்பாற்ற முயற்சிக்கிறோம் என்று காங்கிரஸ் சொன்னாலும், அது நடப்பது போலத் தெரியவில்லை.

போலிச்சண்டை

உள்ளாட்சித் தேர்தல்களில் கூட்டணி வைத்துக் கொள்வது சாத்தியமில்லை என்று முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவ கவுடா கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் ஜனதா தளத்தின் தளங்கள் என்று கருதப்படும் இடங்களில் பாஜக தனது செல்வாக்கைப் படர விடுவதால் அவர் ஆத்திரமடைந்துள்ளார். கர்நாடக மாநில பாஜக தலைவ

ரான விஜயேந்திரா அளித்த பேட்டியில், 2028 தேர்தலில்

அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஜக வெல்லும்

என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலடி தரும் வகை யில்தான் தேவ கவுடா இப்படிச் சொல்லியிருக்கிறார். தங்கள் கட்சியின் செல்வாக்கையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதல்லவா என்று

கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூறுகின்ற னர். சண்டை போடுவது போல நடிக்கிறார்கள். வேறொன்று

மில்லை என்று எதிர்க்கட்சிகள் சொல்கின்றன.

கதறல்

“நீ சீனாக்காரன்தானே.. நீ மோமோ..” என்று சொல்லி 24 வயது திரிபுரா இளைஞனை கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறார்கள். உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அஞ்செல் சக்மா என்ற அந்த திரிபுரா இளைஞர் முதுகலை மேலாண்மைப் படிப்பை டேராடூனில் பயின்று வந்தார். கடுமையான வெறுப்பு வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டே தாக்குதல் நடத்தியவர்கள், “நான் திரி

புராக்காரன், இந்தியன்” என்று சொல்லி

யும் நிறுத்தவில்லை. தாக்கியவர்களில் சிலர் கைதாகியுள்ள

னர். பாஜக ஆளும் மாநிலங்களில் இது போன்ற சம்பவங்கள்

தொடர்ச்சியாக நடக்கின்றன. வெறுப்புப் பிரச்சாரத்தின் விளைவுகள் குறித்து இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் தண்டனை கிடைத்தாலும், ஆள்பவர்கள் உதவியுடன் வெளியில் வந்துவிடுகிறார்கள் என்பதையும் மாணவர் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.