கால்பந்து போட்டி: 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு
29 Dec 2025, 6:22 pm
<p><strong>கால்பந்து போட்டி: 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு</strong></p>
<p>கோவை, டிச.29- கோவையில் நடைபெற்ற பிரம் மாண்ட கால்பந்து போட்டியில், 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங் கேற்றனர். கோவையை தலைமையிட மாக கொண்ட டிராக் போர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (Track Force Sports Club) சார்பில், இளைஞர்களி டையே ஒற்றுமை மற்றும் விளை யாட்டு ஆர்வத்தை வளர்க்கும் நோக் கில் ‘பிரதர்ஹுட் டிராபி 2025’ (Brotherhood Trophy 2025) 6 ஆவது பதிப்பு கால்பந்து போட்டிகள் சிறப் பாக நடைபெற்றது. கரும்புக்கடை இஸ்லாமிய மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள டி.எஃப்.எஸ்.சி (TFSC) மைதானத்தில் டிசம்பர் 27 மற் றும் 28 ஆகிய தேதிகளில் 7 பேர் கொண்ட கால்பந்து தொடர் நடைபெற் றது. இதில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட அணிகளிலி ருந்து 1000-க்கும் மேற்பட்ட சிறு வர்கள் மற்றும் இளம் வீரர்கள் ஆர் வத்துடன் பங்கேற்று தங்களது திற மைகளை வெளிப்படுத்தினர். 11,15 மற்றும் 17 வயதுக்குட்பட்ட மூன்று பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டிய திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டாக்டர் ஆர். மகேந்திரன், கோவை மாநகராட்சி மேயர் க. ரங்க நாயகி, துணை மேயர் ஆர். வெற்றி செல்வன் ஆகியோர் உரையாற்றி னர். இந்தத் தொடரின் முக்கிய நிகழ் வாக, “போதை இல்லா சமூகம் - வள மான எதிர்காலம்” என்ற விழிப்பு ணர்வு முழக்கம் முன்வைக்கப்பட் டது. இளைஞர்களை போதைப் பழக்கத்திலிருந்து மீட்டு, ஆரோக் கியமான உடல் மற்றும் மன உறுதியு டன் நல்வழிப்படுத்த விளையாட்டு ஒரு சிறந்த கருவி என விழாவில் கலந்துகொண்ட விருந்தினர்கள் வலி யுறுத்தினர்.</p>
