தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உணவகங்களில் அதிரடி ஆய்வு: காலாவதியான பொருட்கள் பறிமுதல்

yesterday
உணவகங்களில் அதிரடி ஆய்வு: காலாவதியான பொருட்கள் பறிமுதல்
<p><strong>உணவகங்களில் அதிரடி ஆய்வு: காலாவதியான பொருட்கள் பறிமுதல்</strong></p><p>நாமக்கல், ஜூன் 21- குமாரபாளையத்திலுள்ள கல்வி நிறுவனங்கள், பேக்கரி, உண வகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற் கொண்டு, காலாவதியான பொருட் களை பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கல்லூரி விடுதிகள் மற்றும் கல்லூரிகளை சுற்றியுள்ள பேக்கரி கள் மற்றும் உணவகங்களில் உண வுப்பாதுகாப்புத் துறையினர் சனி யன்று திடீர் ஆய்வு மேற்கொண்ட னர். இந்த சோதனையில், நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையின் சார்பில் மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரெங்க நாதன், லோகநாதன் ஆகியோர் ஈடு பட்டனர். குமாரபாளையம் பகுதியி லுள்ள கல்லூரி விடுதிகள், கல்லூரி களை சுற்றியுள்ள உணவு வணிக நிறுவனங்களில் ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டன. உணவு தயா ரிப்பு மற்றும் பரிமாறும் பகுதிக ளின் சுகாதார நிலை, உணவுப் பொருட்களின் தரம், காலாவதி தேதி, சேமிப்பு முறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் பணியாளர்களின் தனிநபர் சுகாதாரம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. ஆய் வின் போது காலாவதியான சமை யல் எண்ணெய்கள், மாவுப் பொருட்கள், சாஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கண்டறியப் பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அரசால் தடை செய்யப் பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களும் கைப் பற்றப்பட்டன. ஆய்வில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்ட தால் சம்பந்தப்பட்ட உணவு வணி கர்களுக்கு மேம்பாட்டு அறிவிப்பு கள் வழங்கப்பட்டன. மேலும், விதி முறைகளை பின்பற்றாத உணவ கங்களுக்கு 10,000 ரூபாய் அபரா தம் விதிக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளை கட்டா யம் பின்பற்றி, ஆய்வின்போது சுட் டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என வணிகர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும், உணவு வணிக நிறுவனங்கள் பயன்படுத் தப்பட்ட சமையல் எண்ணெயை மீண்டும் உணவு தயாரிப்பில் பயன் படுத்தக் கூடாது என்றும், திண் பண்டங்கள் வகைகள் தயாரிப்பில் செயற்கை நிறமிகள் பயன்படுத்து வதை தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.