உணவுப் பாதுகாப்பு அலுவலர்களின் 15 ஆண்டுகால உழைப்பு வீணாகலாமா? - அ.தி.அன்பழகன்
6 Jun 2026, 8:04 pm

உணவுப் பாதுகாப்பு அலுவலர்களின் 15 ஆண்டுகால உழைப்பு வீணாகலாமா? - அ.தி.அன்பழகன்

உணவுப் பாதுகாப்பு அலுவலர்களின் 15 ஆண்டுகால உழைப்பு வீணாகலாமா? - அ.தி.அன்பழகன் தேவைக்குச் சமூகத்தையே நம்பியிருக்கி றது. ஆனால், தன் தனிப்பட்ட லாபத்திற்கா கச் சிலர் உணவில் செய்யும் முறைகேடுக ளைத் தடுத்து, மக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். அந்த அடிப்படையில், இந்திய மக்கள் பாதுகாப்பான உணவைப் பெற உரு வாக்கப்பட்ட சட்டம்தான் “உணவு பாது காப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011” ஆகும். 05.08. 2011 முதல் இச்சட்டம் இந்தியா முழுமைக் கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

முந்தைய சட்டமும் தற்போதைய மாற்றமும்

இதற்குமுன் இருந்த ‘உணவு கலப்பட தடைச்சட்டம் 1954’ குற்றம் கண்டறிந்து தண்டனை வழங்குவதை மட்டுமே குறிக் கோளாகக் கொண்டிருந்தது. ஆனால், தற்போதைய சட்டம் பாதுகாப்பான உணவு கிடைப்பதற்கான ஆலோச னைகளையும் நுகர்வோருக்கு இழப்பீட்டு உரிமையையும் வழங்குகிறது. இச்சட்டத் தை அமல்படுத்த தன்னாட்சி பெற்ற ‘உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்’ செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இச்சட்டத்தை அமல் படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் ‘உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை’ 05.08.2011-இல் ஏற்படுத்தப்பட்டது. மாநில ஆணைய ரின் கீழ் வட்டாரம் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவ லர்கள் (FSO) பணியாற்றி வருகின்றனர். உணவைக் கண்காணிப்பது, மாதிரி எடுத்துச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது, உரிமம் வழங்குவது இவர்களின் பணி களாகும்.

அடிப்படை வசதிகளற்ற அவலம்

இச்சட்டத்தை அமல்படுத்தும் இவர்க ளுக்குக் குறைந்தபட்ச வசதிகளை ஏற் படுத்தித் தர வேண்டுமெனக் கடந்த 15 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். அரசுச் செயலாளருடன் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தி, கோரிக்கைகளை ஒப்புக் கொண்டு ‘கூட்ட நடவடிக்கை குறிப் புகள்’ வழங்கப்பட்ட போதிலும் அவை இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

ஒரு கிராம நிர்வாக அலுவலருக்கு இரண்டு உதவியாளர்கள் உள்ளனர். ஆனால், சட்டப்பூர்வமான ஆபத்தான பணிகளை மேற்கொள்ளும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு ஒரு உதவியாளர் கூட இல்லை. தடைசெய்யப் பட்ட பொருட்களைப் பறிமுதல் செய்யும் போது, வாகன வசதி இன்றிச் சொந்தப் பணத்தைச் செலவழித்து அவற்றை அலுவலகத்திற்குக் கொண்டு சேர்க்கும் அவலம் தொடர்கிறது. இணையவழித் தகவல்களை அனுப்பக் குறைந்தபட்சச் செல்லிடப்பேசி வசதி கூட அரசிடமிருந்து இல்லை.

தாய்த்துறைக்கு அனுப்பும் சதி

ய்த்துறைக்கு அனுப்பும் சதி முன்பு சுகாதார/துப்புரவு ஆய்வா ளர்களாக இருந்து, உணவு ஆய்வா ளர்களாகப் பணிபுரிந்தவர்கள், தகுதி யின் அடிப்படையிலேயே 05.08.2011 முதல் ‘உணவு பாதுகாப்பு அலுவலர்க ளாக’ அரசு கெஸட்டில் அறிவிக்கை செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர். இதற் காக ஒவ்வொருவரிடமும் விருப்பக் கடி தம் பெறப்பட்டது. கடந்த ஆட்சிக் காலத் தில், முதலமைச்சரின் முதன்மைச் செய லாளராக உள்ள முனைவர் பி.செந்தில் குமார் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நலப்பணிகள் செயலாள ராக இருந்தபோது, இவர்களுக்கான பணி விதியில் பாதுகாப்பும் (Savings Clause) வழங்கப்பட்டது.

இச்சூழ்நிலையில், 15 ஆண்டுக ளுக்கும் மேலாகப் பதவி உயர்வே இல்லா மல் உழைத்து, சட்டவிதிப்படி பதவி உயர்வு கோரி அரசிடமும் நீதிமன்றத்திலும் போராடிக் கொண்டிருக்கும் இவர்களை, மீண்டும் ‘தாய்த்துறைக்கு’ அனுப்ப மக்கள் நல்வாழ்வுத் துறையின் புதிய செயலாளர் முடிவெடுத்துள்ளதாகத் தெரி கிறது. இவர்களின் பணியைப் பறிக்க நினைப்பது பெரிய நம்பிக்கை துரோகமா கும். இந்திய அளவில் தமிழ்நாடு அரசு, உணவுப் பாதுகாப்பில் தொடர்ந்து விருதுகளைப் பெற்று வருவதற்கு இவர்களின் உழைப்பே காரணம்!

முதல்வர் தலையிட வேண்டும்

முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் உடனடியாகத் தலை யிட்டு, உணவு பாதுகாப்பு அலுவலர்க ளைத் தாய்த்துறைக்கு அனுப்புவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். சட்ட விதிக ளுக்கு உட்பட்டு அவர்களுக்குரிய பதவி உயர்வை வழங்க வேண்டும். இந்த நியாயமான கோரிக்கைக்கு அனைத்து அரசியல் இயக்கங்களும், சமூக நல விரும் பிகளும் குரல் கொடுக்க வேண்டும்.