தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை இன்று தொடக்கம்

13 Mar 2026, 4:52 pm
வேளச்சேரி - பரங்கிமலை இடையே  பறக்கும் ரயில் சேவை இன்று தொடக்கம்
<p><strong>வேளச்சேரி - பரங்கிமலை இடையே &nbsp;பறக்கும் ரயில் சேவை இன்று தொடக்கம்&nbsp;</strong></p> <p>சென்னை,மார்ச் 13- வேளச்சேரி - பரங்கிமலை இடையே நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் சேவை சனிக்கிழமை (மாா்ச் 14) முதல் தொடங் கப்படவுள்ளதாக சென்னை கோட்ட ரயில்வே &nbsp;தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு : &nbsp;சென்னை ரயில்வே கோட்டத்தில் பறக்கும் ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்ட மாக வேளச்சேரி - பரங்கிமலை இடையே புதிய நீட்டிப்புப் பாதை அமைக்கும் பணிகள் அண்மையில் முடிவு பெற்றது. இந்த நிலையில், பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு, ரயில்களை இயக்குவதற்காக &lsquo;தற்காலிக அதிகாரபூா்வ சான்றிதழை&rsquo; ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் வழங்கியுள்ளார். இதற்கிடையே, ரயில்வே பாது காப்பு ஆணையரின் ஆய்வின்போது, சென்னை மெட்ரோ ரயில் உள்கட் டமைப்பின் மேல் அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதியில் உள்ள சாரங்களை அகற்ற அறிவுறுத்தப் பட்டது. இப்பணியை மேற்கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 24 மணி நேர அவகாசம் கோரியுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்ததால் சனிக்கிழமை (மாா்ச் 14) முதல் அந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்படும். 96 ரயில்கள் இவ்வழித்தடத்தில் கடற்கரை - பரங்கிமலை இரு மாா்க்கத்திலும் &nbsp;86 ரயில்கள் இயக்கப்படும். அதேபோல் கடற்கரை - வேளச்சேரி இடையே இரு மாா்க்கத்திலும் 4 ரயில்கள், பரங்கிமலை - வேளச்சேரி இடையே இரு மாா்க்கத் திலும் 6 ரயில்கள் இயக்கப்படும். என மொத்தம் 96 ரயில்கள் இவ்வழித் தடத்தில் இயக்கப்படவுள்ளன. இந்த நீட்டிப்பு, பறக்கும் ரயில் தடத்தில் நேரடி இணைப்பை உறுதி செய்வதோடு, தினமும் பயணிகளுக்கு தடையற்ற பயணத்தை வழங்கும். &nbsp;குறிப்பாக, பரங்கிமலை ரயில் நிலையம், &nbsp;பறக்கும் ரயில், &nbsp;புறநகர் ரயில்,சென்னை மெட்ரோ ரயில் ஆகிய மூன்று முக்கிய போக்குவரத்து அமைப்புகளையும் இணைக்கும் ஒரு ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமாகஅமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரங்கிமலை வரும் ரயில் பயணி கள் அங்கிருந்து மெட்ரோ ரயில் மூலம் வடபழனி,கோயம்பேடு, அண்ணா நகர் வழியாகவும் சென்ட்ரல் செல்ல லாம். ஆலந்தூர் வரை பயணித்து அண்ணாசாலை வழியாக விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் வரை செல்ல முடியும். பல ஆண்டுகள் காத்தி ருந்த ரயில் பயணிகளுக்கு சனிக் கிழமை விடிவு காலம் பிறந்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.