தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பறக்கும்படை சோதனையில் தங்கம், பணம் பறிமுதல்

18 Mar 2026, 3:34 pm
பறக்கும்படை சோதனையில் தங்கம், பணம் பறிமுதல்
<p><strong>பறக்கும்படை சோதனையில் தங்கம், பணம் பறிமுதல்</strong></p> <p>உதகை, மார்ச் 18- தமிழ்நாட்டில், ஏப்.23 ஆம் தேதி யன்று சட்டமன்ற தேர்தல் நடை பெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள தால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர &nbsp;வாகன சோதனையில் ஈடுபட்டு வரு கின்றனர். இதனையடுத்து, தங்கம், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மூன்று சட்டமன்ற தொகுதிகளை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் 24 &nbsp;மணி நேரமும் தீவிர வாகன சோதனை &nbsp;நடைபெற்று வருகிறது. இந்நிலையில், &nbsp;திங்களன்று இரவு தொட்டபெட்டா அருகே உள்ள பேரார் பகுதியில் தேர் தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது, கோவையிலிருந்து உதகைக்கு &nbsp;வந்த ஒரு லாஜிஸ்டிக் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப் பிலான தங்க நகைகள் இருந்தது தெரிய &nbsp;வந்தது. இதையடுத்து எந்தவொரு ஆவ ணங்களும் இல்லாததால் தங்க நகை களுடன் வந்த வாகனத்தை, அதிகாரி கள் பறிமுதல் செய்து உதகை கோட் டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்த னர். &nbsp;இதையடுத்து நடைபெற்ற விசா ரணையில், கோவையை சார்ந்த தனி யார் லாஜிஸ்டிக் நிறுவனம் தங்க நகை களை உதகையிலுள்ள பிரபல நகை கடைகளுக்கு விநியோகம் செய்ய வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டது. மேலும், &nbsp;சம்பந்தப்பட்ட தனியார் லாஜிஸ்டிக் நிறு வனத்தினருக்கு தங்க நகைகளுக்கான &nbsp;ஆவணங்களை வருமான வரித்துறை யினரிடம் சமர்ப்பிக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, உதகை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையி னர் மேற்கொண்டுள்ள வாகன சோதனையை மாவட்ட தேர்தல் அலு வலரும், ஆட்சியருமான லட்சுமி பவ்யா &nbsp;தண்ணீரு, காவல் கண்காணிப்பாளர் நிஷா ஆகியோர் ஆய்வு செய்தனர். தருமபுரி தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட &nbsp;ஒகே னக்கல் ஆலம்பாடி சோதனைச் சாவடி யில் தேர்தல் பறக்கும் படை அலுவ லர் வன அலுவலர் சிவரஞ்சனி &nbsp;தலைமை யிலான குழுவினர் வாகன தணிக்கை யில் ஈடுபட்டனர். அப்போது &nbsp;அந்த வழி யாக மோட்டார் சைக்கிளில் வந்த &nbsp;தருமபுரி கே.வி ரத்தினம் தெருவை சேர்ந்த குணசேகரன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த &nbsp;ரூ 1 லட்சத்து 62ஆயிரத்து 800 பணம் மற்றும் 706 கிராம் வெள்ளி பொருட் கள் வைத்திருந்தது தெரியவந்தது. &nbsp; அதேபோல் நாகதாசம்பட்டி பிரிவு &nbsp;சாலையில் வாகன தணிக்கையில் ஈடு பட்டபோதுகூத்தப் பாடி கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் காரில் &nbsp;உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப் பட்ட ரூ.68 ஆயித்து350 பணம் பறி முதல் செய்யப்பட்டது. இரு வேறு இடங் களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 &nbsp;லட்சத்து 31 ஆயித்து 350 பணம் மற்றும் &nbsp;706 கிராம் வெள்ளி பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் பாபு உதவி தேர்தல் நடத் தும் அலுவலர் ஆறுமுகம் ஆகியோரி டம் ஒப்படைக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.