விமானத்தில் நடந்த அதிர்ச்சி: நியாயமான விசாரணை தேவை!
1 Oct 2026, 9:50 pm

விமானத்தில் நடந்த அதிர்ச்சி: நியாயமான விசாரணை தேவை!

துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஃபிளை துபாய் (Flydubai) விமானத்தில் நிகழ்ந்திருக்கும் அதிர்ச்சிச்சம்பவம் சர்வதேச வான்வெளிப் பாதுகாப்பின் மீதான பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. விமானம் 33,000அடியில் பறந்து கொண்டிருந்தபோது, இணை விமானியால் இந்திய நாட்டைச் சேர்ந்த தலைமை விமானி ஸ்மித் மச்சார் தாக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டதும், விமானம் ஒரு நிமிடத்தில்16,000 அடி வரை சரிந்து அவசரமாக சவூதிஅரேபியாவில் தரையிறக்கப்பட்டதும் பயணிகளைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது. காயமடைந்த போதிலும், தன் உயிரைப் பொருட்படுத்தாமல் போராடிப்பெரும்துயரத்தைத் தடுத்த இந்தியவிமானி மச்சாரின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், இந்த விவகாரத்தை உடனடியாகத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் காழ்ப்புணர்ச்சிகளைத் திணிக்கும் வகையான போர்தொடுக்கும் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சம்பவம் நடந்த உடனே இஸ்ரேலியப் பிரதமர்பெஞ்சமின் நேதன்யாகு இதனை ஒரு “பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி” என்று முத்திரைகுத்தி, முன்கூட்டியே ஒரு முடிவுக்கு வந்துள்ளார். இஸ்ரேலிய ஊடகங்களும் இதனை ஜிகாதி பயங்கரவாதமாகச் சித்தரித்து, “வெளிநாட்டவர்” மீதான வெறுப்பாக மாற்றப் பார்க்கின்றன.மறுபுறம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்புகள் முறையான தடயவியல் மற்றும் சட்டப்பூர்வவிசாரணைக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையைச் சுட்டிக்காட்டி, முதிர்ச்சியான அணுகலைக்கடைப்பிடிக்கின்றன. எந்தவொருமுன் முடிவுக்கும் வராமல், இந்தத் துயர நிகழ்வுக்கான உண்மையான காரணங்களை ஆழமாக விசாரிக்க வேண்டியது அவசியமாகும்.

இது வெறும் தனிப்பட்ட ஒரு விமானியின் வன்முறை மட்டுமல்ல; மாறாக, நவீன விமானப்போக்குவரத்துத் துறையில் நிலவும் கட்டமைப்புரீதியான கடுமையான குறைபாடுகளையே இதுகாட்டுகிறது. 9/11 தாக்குதலுக்குப் பிறகு கவசக் கதவுகள் மூலமாக விமானக் கூண்டுக்குள் (Cockpit) வெளி நபர்கள் நுழைவது தடுக்கப்பட்டாலும், அதே கதவுகள்உளவியல்ரீதியான நெருக்கடிகளையும், விமானிகளுக்கு இடையேயான மோதல்களையும் உள்ளேயே அடைத்துவிடுகிறது. பன்னாட்டு முதலாளித்துவ அழுத்தங்கள், தொடர்ச்சியான பணிச்சுமை, கடுமையான மனஉளைச்சல் ஆகியவை விமானிகளை எத்தகைய தீவிர நிலைக்குத் தள்ளுகின்றன என்பதை சர்வதேச வான்வெளி ஆய்வாளர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, இந்திய விமானியின் வீரத்தைப் பாராட்டுவதோடு நின்றுவிடாமல், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க முறையான மற்றும் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.