கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
11 Dec 2025, 5:47 pm

மலர் கண்காட்சி: டிசம்பரில் நாற்று நடவு பணி துவக்கம்

உதகை, டிச.11- உதகையில் மே மாதம் நடைபெற வுள்ள மலர் கண்காட்சிக்காக, மலர் நாற்று நடவு பணி டிசம்பர் மாத இறுதி யில் துவங்கப்படவுள்ளது. உதகைக்கு வந்து செல்லும் சுற்று லாப் பயணிகளை மகிழ்விக்கும் வகை யில், ஆண்டுதோறும் மே மாதம் தோட் டக்கலைத்துறை சார்பில் மலர் கண் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. மலர் கண்காட்சியின்போது 35 ஆயிரத் திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பல் வேறு வகையான மலர்செடிகள் நடவு செய்யப்படும். அந்த தொட்டிகள் மாடங்களில் அலங்கரித்து வைக்கப் படும். மேலும், புல் மைதானங்களில் பல் வேறு வடிவங்களில் சுற்றுலா பயணி கள் பார்வைக்காக அலங்கரித்து வைக் கப்படும். பூங்கா முழுவதிலும் நடவு செய்யப்பட்டுள்ள பல லட்சம் மலர் செடி களில் ஏப்ரல் மாதம் முதலே மலர்கள் மலர துவங்கிவிடும். அனைத்து மலர் செடிகளிலும் பூக்கள் பூத்துக்குலுங் கும். உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பூக்கும் பல்வேறு வகையான மலர்செடி கள் நடவு செய்யப்பட்டு, அவைகள் அனைத்திலும் பூக்கள் பூத்து குலுங் கும். இந்த மலர்கள் இங்கு வரும் சுற் றுலாப் பயணிகளை கவர்ந்து வரு கிறது. இந்நிலையில், அடுத்தாண்டுக்கான மலர் கண்காட்சிக்காக விதைகள் சேகரிக்கப்பட்டு, 5 மாதங்களுக்கு பின் பூக்கும் மலர் செடிகளான பெகோனியா, ெகன்கிளாசம், வால்சம், சோலியாஸ், லிசியந்தால், சால்வியா மற்றும் டெல் பீணம் ஆகிய வகைகளை சேர்ந்த மலர் நாற்றுக்கள் தாவரவியல் பூங்காவின் மேல் பகுதியில் நர்சரியில் தயார் செய் யப்பட்டு வருகிறது. தற்போது நாற்று கள் தயாரான நிலையில் இம்மாதம் இறுதி வாரத்தில் 6 மாதங்களுக்கு பின் பூக்கும் மலர் செடிகள் நாற்று நடவு பணி துவக்கப்படவுள்ளது. இதற்காக, பூங்காவில் உள்ள 35 ஆயிரம் தொட்டி களில் மண் நிரப்பும் பணிகளும் மேற் கொள்ளப்படவுள்ளதென தோட்டக் கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவலர் குடியிருப்புப் பகுதியில் சுகாதார சீர்கேடு!

தருமபுரி, டிச.11- அரூர் நகராட்சி காவலர் குடியிருப்பு அருகே கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அரூர் பேரூ ராட்சியுடன் மோப்பிரிப்பட்டி மற்றும் தொட்டம்பட்டி ஊராட்சிகள் இணைக் கப்பட்டு, அரூர் நகராட்சி உருவாக்கப் பட்டது. அரூர் நகரத்தின் காவலர் குடி யிருப்புப் பகுதியில் கொட்டப்பட்டும் குப்பை மாதக்கணக்கில் சுத்தம் செய் யப்படாமல் உள்ளது. அங்கு கழிவுநீர் கால்வாய் தண்ணீரும் குப்பையுடன் சேர்ந்து துர்நாற்றம் ஏற்படுகிறது. இங்கு உருவாகும் கொசுவால் அப்பகுதி குடி யிருப்பு வாசிகளுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. எனவே, குவிந்துள்ள குப்பைகளை அகற்றி, சாலைகள் மற் றும் கால்வாயை சுத்தம் செய்து, கொசுவை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை உடன டியாக தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வா கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டல்

கோவை, டிச.11- கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திற்கு 15 ஆவது முறையாக வெடி குண்டு மிரட்டல், வந்ததால் மாநகர போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை யிட்டனர். கோவை ஆட்சியர் அலு வல வளாகத்தில் 2 ஆர்.டி.எக்ஸ் வகை வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், மதி யம் 2 மணிக்கு அது வெடிக்க உள்ளதாக மின்னஞ்சல் மூலம் 15 ஆவது முறையாக மிரட்டல் செய்தி வந்தது. இதையடுத்து கோவை மாந கர வெடிகுண்டு செயலி ழப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் அரசு அலுவலகங்களில் சோதனையிட்டனர். அப் போது இந்த மிரட்டல் மின் னஞ்சல் வெறும் புரளி என் பது தெரியவந்தது. இருப் பினும் தொடர்ந்து டார்க் நெட் மூலம் மின்னஞ்சல் அனுப்பி வரும் நபர் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வரு கின்றனர்.