தீக்கதிர் உலக செய்திகள்
25 Nov 2025, 3:29 pm

வியட்நாமில் வெள்ளம்: 90 பேர் பலி

அக்டோபர் மாத இறுதியில் இருந்து தென்-மத்திய வியட்நாம் பகுதிகளில் இடைவிடாத மழை பொழிந்து வருகிறது. இதனால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக 90 பேர் பலியாகியுள்ளனர். பல நூறு மில்லி யன் டாலர்கள் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளி யிட்ட அறிக்கையின்படி, பலியான 90 பேர்களில் 60-க்கும் மேற்பட்டோர் டாக் லாக் என்ற பகுதியை சேர்ந்தவர்கள். அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா இல்லாமல் உலகம் இயங்க முடியும்

சர்வதேச அரங்கில் தனது பங்கை அமெரிக்கா அதிகமாக மதிப்பிடக் கூடாது. அமெரிக்கா இல்லாமல் உலகம் தொடர்ந்து இயங்க முடியும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். மேலும், பலதரப்பட்ட பிரச்சனை களை அமெரிக்காவின் தலையீடு இல்லாமலேயே தீர்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜி20 உச்சி மாநாட்டின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொருளாதாரத்தின் “ஈர்ப்பு மையம்” அமெரிக்காவை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

சூடான் உள்நாட்டுப்போர் மூன்று மாதங்களுக்கு நிறுத்துவதாக அறிவிப்பு

கார்டூம்,நவ.25- சூடானில் நடந்து வரும் உள்நாட்டுப் ப்போர் மூன்று மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக நிறுத்துவதாக துணை ராணுவ தளபதியான மொஹமத் ஹம்டான் டகாலோ அறிவித்துள்ளார். இந்த போர் நிறுத்தத்தை சூடான் ராணுவ தளபதி அப்துல் ஃபத்தாஹ் அல்-புர்ஹான் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை. போர் நிறுத்தம் தொடர்பாக எகிப்து, சவூதி அரேபியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடு களின் மூலம் மத்தியஸ்த பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகம் சூடான் துணை ராணு வத்துக்கு கள்ளச்சந்தை மூலமாக ஆயு தங்கள் கொடுத்து உதவி வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலை யில் அந்நாடு பேச்சுவார்த்தைக் குழுவில் இருப்பதால் அது குறித்து கேள்வி எழுப்பியதுடன், பேச்சுவார்த்தையை நிராகரிப்பதாக சூடான் ராணுவ தளபதி அப்துல் ஃபத்தாஹ் அறிவித்திருந்தார். மேலும் இத்திட்டம் மிக மோச மான திட்டம். இந்த ஒப்பந்தம் ராணு வத்தின் இருப்பை நீக்கிவிடும் அனைத்து பாதுகாப்பு நிறுவனங் களையும் கலைத்துவிடும் என்று விமர்சித்திருந்தார். இத்தகைய சூழலில் தான் இந்த போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்வதாக துணை ராணுவ தளபதி மொஹமத் அறிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு உமர் அல் பஷீர் தலைமையிலான ஆட்சியை சூடான் ராணுவமும் துணை ராணுவமும் இணைந்து கவிழ்த்தன. அதன் பிறகு ராணுவத் தளபதி அப்துல் ஃபத்தாஹ் மற்றும் துணை ராணுவத் தளபதி மொஹமத் ஹம்டான் ஆகியோருக்கு இடையே ஆட்சிக்கு யார் தலைமை வகிப்பது என்ற அதிகாரப்போட்டி ஏற்பட்டு அது உள்நாட்டுப்போராக வெடித்தது. இந்த போரின் காரணமாக 1 கோடியே 40 லட்சம் அல்லது அதற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் கொடிய வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். பெண் களும் குழந்தைகளும் துணை ராணு வத்தினரால் பாலியல் வன்கொடுமை களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் கடத்தப்பட்டுள்ளார்கள். பல இடங்களில் துணை ராணுவம் மக்களை படுகொலை செய்துள்ளது. போர் நிறுத்தத்தை ஏற்பதாக துணை ராணுவம் அறிவித்திருந்தாலும் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படுமா என கேள்விகள் எழுந்துள்ளன.

உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்த வரைவு ஒப்பந்தத்தில் மாற்றம்

உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர முன்மொழியப்பட்ட 28 அம்ச வரைவு ஒப்பந்தம் 19 அம்ச ஒப்பந்தமாக மாற்றப்பட்டுள்ளது. ரஷ்ய பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பிறகு 28 அம்சக்கொள்கை உருவாக்கப்பட்டது. அது ரஷ்யாவுக்கு ஆதரவாக இருப்பதாக உக்ரைனும் ஐரோப்பிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக உக்ரைன் நிலைப்பாட்டிற்கு சற்று ஆதரவாக இருக்கும் வகையில் பல விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தில் தொழிலாளர்கள் பணி நீக்கம்

ஆப்பிள் நிறுவனம் தங்கள் விற்பனைப் பிரிவில் உள்ள தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. வணிக, அரசு நிறுவனங்களுக்கு சேவை செய்யும் கணக்கு மேலாளர்கள், விற்பனைத் துறை மேலாளர்கள், ஆப்பிள் நிறுவனப்பொருட்கள் விளக்க மையங்களில் பணிபுரி வோர் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். அமெரிக்க பாதுகாப்புத் துறை, நீதித்துறை உள்ளிட்ட நிறுவனங்களு டன் இணைந்து பணியாற்றும் விற்பனைக் குழுவை நீக்கும் பணியையும் இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.