தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கார்ப்பரேட் நிறுவனங்களின் அதீத லாப வெறிக்கு எதிராக திருப்பூரில் பிளிப்கார்ட் மினிட்ஸ் ஊழியர்கள் போராட்டம்!

5 Jun 2026, 10:26 pm
கார்ப்பரேட் நிறுவனங்களின் அதீத லாப வெறிக்கு எதிராக திருப்பூரில் பிளிப்கார்ட் மினிட்ஸ் ஊழியர்கள் போராட்டம்!

ஆடை உற்பத்தியின் உலகளாவிய தலை நகரமாகவும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதார மையமா கவும் விளங்கும் திருப்பூர் மாநகரில், தற்போது புதிய வடிவிலான கார்ப்பரேட் உழைப்புச் சுரண்டல் தலைதூக்கியுள்ளது. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் லாப வெறிக்கு எதி ராக, விநியோக ஊழியர்கள் வீதியில் இறங்கி போராடும் சூழல் உருவாகியுள்ளது. திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள பிரபல ஆன் லைன் விரைவு விநியோக நிறுவனமான பிளிப் கார்ட் மினிட்ஸ் கிளையின் முன்பு, தங்களின் அநியாய ஊதியக் குறைப்பை எதிர்த்து விநி யோக ஊழியர்கள் நடத்திய முற்றுகைப் போராட்டம் கவனத்தை ஈர்த்துள்ளது.

அடுக்கடுக்கான சம்பள குறைப்பு

சமீபகாலமாக, ஆர்டர் செய்த 10 முதல் 15 நிமிடங்களிலேயே மளிகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாடிக்கையாளர் களிடம் சேர்க்கும் குவிக் காமர்ஸ் கலாச்சாரம் இந்திய நகரங்களில் பெருகி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே இ-காமர்ஸ் துறையின் ஜாம்பவானான பிளிப்கார்ட் நிறுவனம், தனது புதிய சேவையான மினிட்ஸ் பிரிவை தமிழகம் மற்றும் நாடு முழுவதும் இதன் சேவை விரி வாக்கப்பட்டுள்ளது. இதில், பல்லாயிரக்கணக் கான இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். திருப்பூரில் அண்மையில் அறிமுகப்படுத்திய இக்கிளையில் சுமார் 40-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் டெலிவரி ரைடர்களாகப் பணி புரிந்து வருகின்றனர். இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு எவ்வித முன்னறிவிப்புமின்றி, கடந்த மூன்று மாதங்களாக நிறுவனம் தன்னிச்சையாகவும் அடுக்கடுக்காகவும் ஊதியத்தைக் குறைத்து வந்துள்ளது தொழிலாளர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 10 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வழங்கப்படும் ஒரு டெலிவரிக்கு கிலோமீட்ட ருக்கு ரூ.4 வீதம், ஒரு ரைடுக்கு ரூ40 வழங்கப் பட்டு வந்தது. இந்நிலையில், நிர்வாகம் இத னைத் தன்னிச்சையாக முதலில் ரூ20 ஆக குறைத்தது. பின்னர், மேலும் குறைத்து ரூ.15 ஆக நிர்ணயித்து, பின்னர், தற்போது 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வெறும் ரூ.11 மட்டுமே வழங்கி வருகிறது. தற்போதைய கடுமையான பெட்ரோல் விலையேற்றத்திற்கும், வாகனப் பராமரிப்புச் செலவிற்கும் மத்தியில், 10 கிலோமீட்டர் தூரம் பயணித்து விநியோகம் செய்யும் ஒரு ஊழிய ருக்கு வெறும் ரூ.11 வழங்குவது என்பது தொழி லாளர்களை கடனாளியாக்கும் அப்பட்ட மான உழைப்புச் சுரண்டலாகும்.

ஐடி முடக்கத்தால் வீதிக்கு வந்த ஊழியர்கள்

தங்களின் இந்த நியாயமான உரிமைக் குறித்து நிறுவன நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பிய ஊழியர்களின் ‘லாக்-இன் ஐடி’ கணக்குகளை நிறுவனம் உடனடியாக முடக்கி யுள்ளது. வாழ்வாதாரம் பறிக்கப்பட்டதால் ஆவேசமடைந்த தொழிலாளர்கள், வெள்ளி யன்று சிஐடியு மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆதரவோடு பிளிப்கார்ட் மினிட்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் இறங்கினர். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.சம்பத், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பாலமுரளி உள்ளிட்ட நிர்வாகிகள் தொழிலாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கினர். கார்ப்பரேட் நிறுவனங்கள் நாட்டின் தொழிலாளர் நலச் சட்டங்களை மதிக் காமல் தன்னிச்சையாகச் செயல்படுவதை தலைவர்கள் கடுமையாகச் சாடினர். கிக் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இத்துறையில் டெலிவரி ரைடர்களாகப் பணியாற்றக்கூடிய ஊழியர்களில் பெரும் பாலானோர் எளிய ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பகுதிநேரமாகப் பணிபுரியும் கல்லூரி மாணவர்கள் ஆவர். திருப்பூரின் பின்னலா டைத்துறை சந்தித்து வரும் நலிவு மற்றும் பனி யன் நிறுவனங்களில் போதிய வேலைவாய்ப்பு இல்லாத சூழலில், தங்களின் மாற்று வாழ் வாதாரமாக இந்த விநியோகத் தொழிலை இளைஞர்கள் முழு நேரமாகவும் பகுதி நேர மாகவும் நம்பியுள்ளனர். இத்தகைய ‘கிக் எகானமி’ எனப்படும் பகுதி நேர விநியோகத் துறையின் உழைப்பு சுரண் டல் கொடூரமானது. இவர்களுக்கு என நிலை யான மாதச் சம்பளம், பி.எஃப், இஎஸ்ஐ போன்ற எந்தவொரு சமூகப் பாதுகாப்போ, சட்டப்பூர்வ சலுகைகளோ கிடையாது. விநியோ கப் பணிக்கான சொந்த இருசக்கர வாகனம், செல்போன், அதற்கான எரிபொருள் செலவு, வாகனப் பராமரிப்புச் செலவு ஆகிய அனைத் தையும் தொழிலாளர்களே ஏற்க வேண்டும். நிறுவனங்கள் இவர்களை தங்கள் தொழிலா ளர்கள் என்று அங்கீகரிக்காமல் பார்ட்டனர் (பங்குதாரர்) என்ற போலி பெயரில் அழைத்து, உழைப்பை உறிஞ்சுகின்றன. போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தொழி லாளர் துறை உதவி ஆணையர் முன்னிலை யில், இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், பழைய ஊதிய முறையான 10 கிலோ மீட்டருக்கு ரூ.40 என்பதை உடனடியாக மீண்டும் அமல்படுத்த வேண்டும். நியாயம் கேட்டதற்காகப் பழிவாங்கும் நோக்கில் முடக்கப்பட்ட ரைடர்களின் லாக்-இன் ஐடி களை உடனடியாக மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களின்படி விநியோக ஊழியர்களுக்கு முறையான பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள் ளனர்.

காலத்தின் கட்டாயம்

கடுமையான வெயில், பெருமழை என எதையும் பொருட்படுத்தாமல், நுகர்வோரின் தேவையை நிமிடங்களில் பூர்த்தி செய்யும் விளிம்பு நிலை தொழிலாளர்களின் உழைப்பை கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் அதீத லாப வெறிக்காக பலியாக்குவதை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. இவர்களுக்கான முறையான ஊதியக் கொள்கையையும், சட்டப்பூர்வ பணிப் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது தற்போதைய காலத்தின் கட்டாயமாகும். கிக் தொழிலாளர்களின் உரிமைகளை மீட் டெடுக்க இவர்களை சங்கமாக திரட்ட வேண் டிய அவசியத்தை, கோவையில் 2025 நவம்ப ரின் நடைபெற்ற சிஐடியு 16 ஆவது மாநில மாநாடு விரிவான திட்டமிடலையும், தீர்மா னத்தை முன்மொழிந்துள்ளது. இதற்கான கட்டமைப்பையும் ஏற்படுத்தி வருகிறது. கிக் தொழிலாளர்கள் 90 சதவீதம் இளைஞர்கள் என்பதால், இவர்களின் உரிமையை நிலை நாட்டும் பொருட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் களமிறங்கி உள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே திருப்பூரில் நடைபெற்ற போராட்டமும், இவர்களுக்கு ஆதரவாக சிஐ டியு மற்றும் வாலிபர் சங்கத்தினரும் கள மிறங்கியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள கிக் தொழிலாளர்கள் சங்கம் சேர வேண்டிய அவசி யத்தை இப்போராட்டம் உணர்த்தியுள்ளது.

(நநி)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.