கே.ஜி.போஸ் நினைவு தின கொடியேற்றம்
11 Dec 2025, 5:47 pm
<p><strong>கே.ஜி.போஸ் நினைவு தின கொடியேற்றம்</strong></p>
<p>ஈரோடு, டிச.11- தபால் தந்தி இயக்கத்தின் முன்னோடியான தோழர் கே.ஜி.போஸ் நினைவு தின கொடியேற்றம் பெருந்துறை யில் வியாழனன்று நடைபெற்றது. அகில இந்திய பிஎஸ்என்எல் - டிஓடி ஓய்வூதியர் சங்கத் தின் பெருந்துறை கிளை சார்பில், தபால் தந்தி இயக்கத்தின் முன்னோடியான தோழர் கே.ஜி.போஸ் நினைவு தினம் வியாழனன்று அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து, டிச.17, 18 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெறவுள்ள சங்கத்தின் 5 ஆவது அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு, கொடியேற்று விழா நடத்த தமிழ் மாநில சங்க அறைகூவல் விடுத்தது. அதன்படி பெருந்துறை தொலைபேசி நிலையத்தில் கொடி யேற்ற நிகழ்வு மற்றும் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. ஓய்வூ தியர் சங்க கிளைப் பொருளாளர் வி.ராமகோடிராஜன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் எஸ்.என்.மயில் சாமி சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் ஐ.கலிலூர் ரஹ்மான், ஒப்பந்த ஊழியர் சங்க தமிழ் மாநிலச் செயலர் எம்.சையத் இத்ரீஸ், கிளை நிர்வாகி ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.</p>
