முந்தய பக்கம்

ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்திடுக: சிபிஎம்

7 Jan 2026, 4:05 pm
ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்திடுக: சிபிஎம்
<p><strong>ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்திடுக: சிபிஎம்</strong></p> <p>கோவை, ஜன.7- ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்யக்கோரி, கோவை ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய ஆட்டோ கட்டணத்தை நிர்ண யம் செய்ய வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். &nbsp;கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் தலைமையில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தெய்வேந்திரன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் மகேஸ்வரன், எம்.கே. முத்துக் குமார், ஸ்டாலின், மூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் நாகராஜ் உள்ளிட்டோர் மனு அளித் தனர். இதுகுறித்து சி.பத்மநாபன் கூறுகையில், கோவை மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலா ளர்கள் உள்ளனர். கடந்த 13 ஆண்டுகளாக போராடியும், உயர் நீதிமன்றம் கூறியும் கட்டணம் உயர்த்தவில்லை. குறைந்தபட்சம் 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.60, அடுத்து வரும் ஒவ் வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.25 நிர்ணயிக்க வேண்டும். அதே போல இருகூரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா வழங்கி யும், 180 பேருக்கு நிலம் அளந்து கொடுக்கப்படாமல் உள் ளது. அதனை உடனடியாக அளவு செய்து கொடுக்க வேண் டும். விளாங்குறிச்சி, உப்பிலியபாளையம் வருவாய் கிரா மங்களில் அரசு உபரி நிலங்களில் ஏதும் அறியாமல் நிலம் &nbsp;வாங்கி வீடு கட்டி சுமார் 20 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க அரசாணை போட்டு இன்னும் வழங்கவில்லை. அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என ஆட்சியரை வலியுறுத்தியுள்ளோம், என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram