தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்த  மீன் லாரி மோதி 5 வாகனங்கள் சேதம் ஒருவ

19 Jan 2026, 2:23 pm
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்த  மீன் லாரி மோதி 5 வாகனங்கள் சேதம் ஒருவ
<p><strong>மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்த &nbsp;மீன் லாரி மோதி 5 வாகனங்கள் சேதம் ஒருவர்</strong></p> <p>&nbsp;பலி: 3 பேர் காயம் குழித்துறை ,ஜன. 19- மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்த மீன் லாரி மோதி 5 வாகனங்கள் சேதம் அடைந்தன. பைக்கில் வந்த ஒருவர் கோழி கூடு விழுந்து பலியானார். மூன்று பேர் காயம் அடைந்தனர் ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் இருந்து மீன் ஏற்றிக்கொண்டு கண்டைனர் லாரி &nbsp; நள்ளிரவு ஒரு மணி &nbsp;ளவில் வந்து கொண்டிருந்தது &nbsp;மார்த்தாண்டம் மேம்பா லத்தில் வரும் போது அதி வேகமாக &nbsp;வந்து முன் சென்ற கோழி ஏற்றி வந்த மினி லாரி மீது மோதியது. அந்த நேரத்தில் கோழி லாரி எதிரே மார்த்தாண்டம் நோக்கி வந்த டாரஸ் லாரி மீது மோதியது. அப்பொ ழுது சாத்தான்கோடை சேர்ந்த தங்கையன் மகன் மணி கண்டன் 47, இவரது நண்பர் ரமேஷ் 45 இருவரும் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். &nbsp;கோழி லாரியின் கோழி கூடு இவர்கள் மீது விழுந்தது இதில் ரமேஷ் பலியானார். மேலும் கண்டெய்னர் லாரி களியக்காவிளையை நோக்கி வந்து கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதியது. இதில் &nbsp; 2 கார்களும் சேதம் அடைந்தன. கோழி வண்டியில் இருந்த திருப்பதிசாரத்தைச் சேர்ந்த கோபி மகன் அனீஸ் 32, ஒழுகினேசேரியைச் சேர்ந்த குமரேசன் 55, ராமபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் மகன் வேணு 22 ஆகிய மூன்று பேர் காயம் அடைந்தனர் கண்டெய்னர் லாரி ஓட்டி வந்த ஆந்திரா மாநிலம் காக்கி நாடாவைச் சேர்ந்த தொப்பி செட்டி நாகராஜு &nbsp;மீது போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் நள்ளிரவில் மேம்பாலத்தில் இரண்டு மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. உடனடியாக போலீசார் மற்றும் அதிகாரி சந்திரன் தலைமையில் தீயணைப்பு படையினர் வந்து வாக னங்களை ஒழுங்குபடுத்தி &nbsp;போக்குவரத்தை சீர் செய்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.