தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மீன்பாசி குத்தகையை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குக! முதலமைச்சருக்கு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு கடிதம்

25 Jun 2026, 11:07 pm
மீன்பாசி குத்தகையை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குக! முதலமைச்சருக்கு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு கடிதம்
<p><strong>மீன்பாசி குத்தகையை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குக! முதலமைச்சருக்கு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு கடிதம்</strong></p><p>சென்னை, ஜூன் 25 - அனைத்து ஏரி, குளம், அணைகளில் மீன்பாசி குத்தகையை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக கூட்டமைப்பின் பொதுச்செய லாளர் எஸ். அந்தோணி முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாட்டில் உள்நாட்டு மீனவர்கள் லட்சக்கணக்கா னோர் ஏரி, குளம், அணையில் மீன் பிடித்து வருகின்றனர். இவர்கள் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாகவும் உள்ளனர். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம், அணைகளில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங் களின் வழியாக மீன்பாசி குத்தகை எடுத்து மீன்பிடி தொழில் நடத்தி வந்தனர். இதற்கான அரசாணை (எண் 332 மற்றும் வருவாய் நிலை எண் 211) 1993ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு தன்னுடைய நிலையை மாற்றி புதிய அரசாணைகளை வெளியிட்டது. இதை எதிர்த்து உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகளை 2023-ஆம் ஆண்டு விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் தண்டபாணி, 1993ஆம் ஆண்டு அரசாணை 332ஐ செயல்படுத்த உத்தரவிட்டார். இந்த உத்தரவை கடந்த அரசு கண்டுகொள்ள வில்லை. எனவே, அரசாணை 332, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து ஏரி, குளம், அணைகளில் மீன்பாசி குத்தகை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும். மீன்வளத்துறையின் நீர்நிலைகளின் ஏல குத்தகை தொகையை குறைத்து வழங்க வேண்டும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.