மீனவர்கள் கைதை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்!
21 Feb 2026, 6:06 am
<p>22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.<br />
கடலுக்குச் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் 22 பேரை கைது செய்து, அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.<br />
கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்தியா – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.<br />
</p>
