தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பயன்பாட்டுப் பாதையில் வனத்துறை கட்டிடம் கட்ட எதிர்ப்பு சிதம்பரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

12 Mar 2026, 4:20 pm
பயன்பாட்டுப் பாதையில் வனத்துறை கட்டிடம் கட்ட எதிர்ப்பு சிதம்பரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>பயன்பாட்டுப் பாதையில் வனத்துறை கட்டிடம் கட்ட எதிர்ப்பு சிதம்பரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>சிதம்பரம், மார்ச் 12- சிதம்பரம் அருகே பொதுமக்கள் நீண்ட காலமாகப் பயன்படுத்தி வந்த பாதையில் வனத்துறையினர் கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிள்ளை பகுதியில் அமைந்துள்ள முழுக்குத்துறை மற்றும் எம்.ஜி.ஆர் திட்டு ஆகிய மீனவக் கிராமங்களில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராம மக்கள் மற்றும் மீனவர்கள் கடந்த பல ஆண்டுகளாக வனத்துறைக்குச் சொந்தமான இடத்தின் வழியாகச் செல்லும் பாதையைத் தங்க ளின் முதன்மைப் போக்குவரத்துப் பாதை யாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் தமிழக முதலமைச்சர் அவர்களால் காணொளி காட்சி வாயிலாக அலையாத்திக் காடுகள் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையைச் சுற்றி வனத்துறையினர் வேலி அமைத்து போக்குவரத்திற்குத் தடை விதிக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். தங்களின் வாழ்வாதாரப் பாதையை அடைக்கக் கூடாது என்றும், ஆராய்ச்சி மையத்தை மாற்று இடத்தில் கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி, கிள்ளை கடைத்தெருவில் திரண்ட மீனவக் கிராம மக்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.