தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விதிமுறைகள் மீறி பாதையில் சுவர் எழுப்பி அராஜகம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட மீனவர்கள் முடிவு

2 Feb 2026, 3:32 pm
விதிமுறைகள் மீறி பாதையில் சுவர் எழுப்பி அராஜகம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட மீனவர்கள் முடிவு
<p><strong>விதிமுறைகள் மீறி பாதையில் சுவர் எழுப்பி அராஜகம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட மீனவர்கள் முடிவு</strong></p> <p>இராமநாதபுரம், பிப்.2- இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள கிழக்கு புதுநகர் பகுதியில், &nbsp;அருகே கடற்கரையிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் பராமரிப்பு இன்றி இருந்த பட்டா நிலம் வழியாக 40 ஆண்டு களாக மீனவர்கள் கடலுக்குச் சென்று வந்த தாக கூறப்படுகிறது. இந்நிலத்தை உரிமை யாளர்களிடமிருந்து சில நில விற்பனை யாளர்கள் பெற்று, பாதைகளை அமைத்து &nbsp;நிலங்களை விற்பனை செய்து வருகின்ற னர். &nbsp;இதனொரு பகுதியாக கடலுக்கு செல் &nbsp;லும் வழியில் திடீரென சுவர் எழுப்பப்பட்ட தால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியா மல் பெரும் சிரமம் அடைந்து வருவதாக தெரிவிக்கின்றனர். &nbsp;இந்த வழித்தடம் அடைக்கப்பட்டதால் 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் கட லுக்கு செல்ல 3 முதல் 5 கிலோமீட்டர் வரை &nbsp;சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், புயல், சுனாமி போன்ற அவசர காலங்களில் படகுகளை மீட்க முடியாத அபாயகரமான சூழல் உரு வாகியுள்ளது என்றும் அவர்கள் தெரி வித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், வரு வாய் துறை, உள்ளாட்சி நிர்வாகம் உள் ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை என வும், இது அரசின் கடற்கரை ஒழுங்குமுறைச் &nbsp;சட்டம் மற்றும் பொது வழித்தட பாது காப்பு விதிகளை வெளிப்படையாக மீறு வது எனவும் மீனவர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஏர்வாடி முதல் &nbsp;முத்துப்பேட்டை இந்திராநகர் வரை யிலான மீனவ மக்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில், அந்த சுவரை உட னடியாக அகற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 12ஆம் தேதி கீழக் &nbsp;கரை தாலுகா அலுவலகத்தை முற்றுகை யிடும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.