முந்தய பக்கம்

மீனவர்கள் கைது : இராமேஸ்வரத்தில் வேலைநிறுத்தம்

22 Feb 2026, 3:26 pm
மீனவர்கள் கைது : இராமேஸ்வரத்தில் வேலைநிறுத்தம்
<p><strong>மீனவர்கள் கைது : இராமேஸ்வரத்தில் வேலைநிறுத்தம்</strong></p> <p>இராமேஸ்வரம், பிப். 22- கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற் படை கைது செய்த மீனவர்களை உடன டியாக விடுவிக்கக் கோரி இராமேஸ் வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இராமநாதபுரம் மாவட்டம் இரா மேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிக ளைச் சேர்ந்த 22 மீனவர்களும், அவர்க ளின் 4 விசைப்படகுகளும் வியாழக் கிழமை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகி றது. இதனைக் கண்டித்து நடைபெற்ற வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட் டத்திற்கு பி. சேசுராஜா தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் இ.ஜஸ்டின் கண்டன உரையாற்றினார். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடு விக்க ஒன்றிய அரசு தலையிட்டு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மீன வர்கள் கோரிக்கை விடுத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram