தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க விரிவான கோரிக்கைப் பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

5 Mar 2026, 3:59 pm
மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க விரிவான கோரிக்கைப் பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்
<p><strong>மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க விரிவான கோரிக்கைப் பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்</strong></p> <p>சென்னை, மார்ச் 5- தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய மீனவர்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் மற்றும் கடல்சார் மேம்பாட்டிற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அரசியல் கட்சித் தலைவர்களிடம் அதன் நிர்வாகிகள் வழங்கினர். அதில், இந்திய அரசியலமைப்புச் சட்டத் திருத்தமின்றி நிலப்பகுதியை வழங்க முடியாது என்ற &lsquo;பெரூபாரி வழக்கு&rsquo; தீர்ப்பின் அடிப்படையில், கச்சத்தீவு உடன்படிக்கையின் செல்லுபடித்தன்மையை உச்ச நீதி மன்றத்தில் நிலைநாட்ட வேண்டும். கைது நடவடிக்கைகள் 2024ஆம் ஆண்டு மட்டும் 535 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டும் மீனவர்களை மனிதாபிமான முறையில் திருப்பி அனுப்பத் தூதரக ரீதியான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இலங்கை நீதி மன்றங்கள் விதிக்கும் அபராதத் தொகையை மாநில அரசே செலுத்தி, மீனவர்களை விடுவிக்கச் சிறப்பு நிதியம் உருவாக்க வேண்டும். இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சு வார்த்தைகளை மீண்டும் தொடங்கி, பாக் ஜலசந்தி பகுதியில் பரஸ்பர மீன்பிடி உரிமைகளை முறைப்படுத்த வேண்டும். மீனவர்களின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் புவியியல் சூழலைக் கருத்தில் கொண்டு, அவர்களைப் பழங்குடியினர் பட்டிய லில் சேர்க்க ஒன்றிய அரசை வலி யுறுத்த வேண்டும். எஸ்.டி. அந்தஸ்து கிடைக்கும் வரை, மாநில அளவில் உரிய உள் இடஒதுக்கீடு வழங்கச் சட்ட ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். கடற்கரை ஓரத்தில் வசிக்கும் அனைத்து மீனவர்களுக்கும் அவர்க ளின் வீடுகளுக்கான &lsquo;சிறப்புப் பட்டா&rsquo; வழங்கவேண்டும். 2021 வாக்குறுதியின்படி &lsquo;2 லட்சம் புதிய வீடுகள்&rsquo; கட்டும் திட்டத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். கடல் அரிப்பைத் தடுக்க 1,076 கி.மீ கடற்கரையிலும் தேவை யான இடங்களில் தரமான தூண்டில் வளைவுகளை அமைக்க வேண்டும். ஆழ்கடல் மீன்பிடிப்பு நவீன ஆழ்கடல் படகுகளுக்கான மானியத் தொகையைச் சந்தை விலைக்கு ஏற்ப ரூ.1 கோடி வரை உயர்த்த வேண்டும். டீசல் விற்பனை வரி விலக்கு அளவை 1,900 லிட்டரிலிருந்து 3,000 லிட்ட ராக உயர்த்த வேண்டும். மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை 30,500 ரூபாயாகவும், மழைக்கால நிவா ரணத்தை 5,000 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும். மீன் மாபியாக்களிடமிருந்து மீனவர்களைக் காக்க, மீன்க ளுக்கு முறையான சந்தை வாய்ப்பும் குறைந்தபட்ச ஆதரவு விலையும் நிர்ணயிக்க வேண்டும். கேரளாவைப் போல் தமிழகத்திலும் மீனவர்களுக்காகக் &lsquo;கடல் ஆம்பு லன்ஸ்&rsquo; திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். நடுக்கடலில் ஆபத்தில் இருக்கும் மீனவர்களை மீட்க 100 விழுக்காடு மானியத்தில் &lsquo;டிரான்ஸ்பாண்டர்&rsquo; மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் வழங்க வேண்டும். மீன்விற்கும் பெண்க ளுக்குக் கட்டணமில்லா குளிர்பதனக் கிடங்குகள், மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன. அதன் ஒருபகுதியாக சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனை கூட்டமைப்பின் மாநிலச்செயலாளர் ஆர்.லோகநாதன் தலைமையில் பொருளாளர் ஜெய்சங்கர், நிர்வாகி கள் கே.செல்வானந்தம், பி.சி.மாறன், பி.விஜயன் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.