முந்தய பக்கம்

தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு

11 Apr 2026, 5:30 am
தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு

தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு

விருதுநகர், அக்.10- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளில் பணிபுரியும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சு.சிவஞானம் தலைமை வகித்தார்.

7 தொகுதிகளின் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் முன்னிலை வகித்தனர். அதில், 7 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 2001 வாக்குச்சாவடிகளில் 128 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவினை நேரடியாகக் கண்காணிக்கும் வகையில் 128 தேர்தல் நுண் பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள், பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவங்கள் உள்ளிட்டவை குறித்து தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் எடுத்துரைத்தனர். மேலும் இதில், நேர்முக உதவியாளர் (தேர்தல்) சோமசுந்தர சீனிவாசன், தனி வட்டாட்சியர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram