முதல் உள்நாட்டுப் பயிற்சி கப்பல் ‘கிருஷ்ணா’ சென்னையில் அறிமுகம்
17 Feb 2026, 3:36 pm
<p><strong>முதல் உள்நாட்டுப் பயிற்சி கப்பல் ‘கிருஷ்ணா’ சென்னையில் அறிமுகம்</strong></p>
<p>சென்னை, பிப். 17- இந்தியக் கடற்படைக்காக எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்படும் மூன்று பயிற்சி கப்பல்களில் முதலாவது கப்பலான ‘கிருஷ்ணா’, சென்னை காட்டுப்பள்ளியில் செவ்வாயன்று பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடற்படைப் பாரம்பரிய முறைப்படி, பாதுகாப்புப் படையினர் நலச் சங்கத்தின் தலைவி அனுபமா இந்தக் கப்பலைத் தொடங்கி வைத்தார். நாட்டின் மூன்றாவது மிக நீளமான நதியான கிருஷ்ணா நதியின் நினைவாக இந்தக் கப்பலுக்கு ‘கிருஷ்ணா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் 20 அதிகாரிகள், 150 மாலுமிகள் மற்றும் 200 பயிற்சி மாணவர்கள் தங்கிப் பணியாற்றும் வசதிகள் உள்ளன. கடற்படை பயிற்சி மாணவர்களுக்கு அடிப்படை கடல்சார் பயிற்சிகளை வழங்குவதே இந்தக் கப்பலின் முதன்மை நோக்கமாகும்.</p>
