சிதம்பரம் - கடலூர் அரசுப் பேருந்தில் முதல் பெண் நடத்துநர்: பயணிகள் மத்தியில் குவியும் பாராட்டு!
5 Oct 2026, 12:27 am

சிதம்பரம் - கடலூர் அரசுப் பேருந்தில் முதல் பெண் நடத்துநர்: பயணிகள் மத்தியில் குவியும் பாராட்டு!

சிதம்பரம், அக்.4 -கடலூர் மாவட்டம் சிதம்பரம் -கடலூர் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்தில் முதல்முறையாகப் பெண் நடத்துநர் ஒருவர் நியமிக்கப்பட்டுப் பணியாற்றி வருவது பயணிகள் மத்தியில், குறிப்பாகப் பெண் பயணிகள் இடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

பொதுவாக அரசுப் பேருந்துகளில் ஆண்களே அதிகளவில் நடத்துநர்களாகப் பணியாற்றி வரும் சூழலில், பெருநகரங்களைத் தொடர்ந்து தற்போது மண்டல அளவிலும் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பண்ருட்டி திருவதிகை பகுதியைச் சேர்ந்த துளசி (32) என்பவர் கடலூர் மாவட்டத்தில் அரசுப்பேருந்தில் பணியாற்றும் முதல் பெண் நடத்துநர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். சிதம்பரம் - கடலூர்இடையே இயக்கப்படும் தாழ்தளப் பேருந்தில் (Low-floor bus) முதற்கட்டமாக 4 நாட்கள் பயிற்சி பெற்ற இவர், தற்போது தற்காலிக அடிப்படையில் நடத்துநராகப் பணியில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து நடத்துநர் துளசி தெரிவிக்கையில். “எனக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள்உள்ளனர். எனது கணவரும் பேருந்துஓட்டுநராகவே பணியாற்றி வருகிறார்.கடலூர் மாவட்டத்திலேயே அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றும் முதல் பெண் நான் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். பேருந்தில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கி சேவை செய்வதில் எனக்கு மிகுந்த மனநிறைவும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது. என்னைப்போல மேலும் பல பெண்கள் பேருந்துநடத்துநர் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் பணிபுரிய தைரியமாக முன்வர வேண்டும்” என்று கூறினார்.பேருந்தில் பெண் நடத்துநர் சுறுசுறுப்பாகவும் புன்னகையுடனும் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கிப் பணியாற்றிவருவது, அவ்வழித்தடப் பயணிகளிடையே மிகுந்த நெகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.