தமிழ்நாட்டில் முதல்முறையாக நாய்களுக்கான பூங்கா திறப்பு
21 Dec 2025, 3:21 pm
<p><strong>தமிழ்நாட்டில் முதல்முறையாக நாய்களுக்கான பூங்கா திறப்பு</strong></p>
<p>உதகை, டிச.21- தமிழ்நாட்டில் முதல்முறையாக உதகையில் நாய்களுக்காக ரூ.40 லட்சம் செலவில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட பூங்கா ஞாயிறன்று திறக்கப்பட்டது. சர்வதேச சுற்றுலாத் தலமான உதகைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளம், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர் தங்களது செல்லப் பிராணியான நாயையும் அழைத்து வருகின்றனர். ஆனால், இங்குள்ள பொதுவான பூங்காக்கள். படகு இல்லம் உள் ளிட்ட இடங்களுக்கு நாயை அவர்க ளால் அழைத்துச் செல்ல முடியாமல், அவற்றை தனியாக அறையில் விட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படு கிறது. இதை தவிர்ப்பதற்காகவும். உதகையில் நாய்கள் வளர்ப்பவர்கள் அவற்றை தனியாக நடை பயிற்சிக்கு அழைத்துச் செல்வதற்காகவும் நாய் களுக்காக பிரத்தியேகமாக பூங்கா அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்ட மிடப்பட்டு அதற்கான பணிகளை தீவி ரப்படுத்தியுள்ளது. இதற்காக சுற் றுலாப் பயணிகள் வருகை மிகவும் குறைவாக உள்ள மரவியல் பூங்கா தேர்வு செய்யப்பட்டு, அங்கு நாய்க ளுக்கான பிரத்தியேக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. குழந்தை கள் பூங்காவில் குழந்தைகளுக்காக சிறப்பு உபகரணங்கள் இருப்பது போல், இங்கு நாய்களுக்கான சிறப்பு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டன. மேலும், புற்க ளால் அமைக்கப்பட்ட சுரங்கப் பாதை, காய்ந்த இலைகள் மூலம் செய்யப்பட்ட குளம், விளையாட்டு தளம், நாய்களை குளிப்பாட்ட ஷவர் உள்பட பல்வேறு ஏற்பாடுகள் செய் யப்பட உள்ளது. இந்தியாவில் ஹைதராபாத்தில் முதன்முதலில் நாய்களுக்காக பிரத்தியேக பூங்கா அமைக்கப்பட்ட நிலையில், அதைத்தொடர்ந்து சண்டிகர் உள்பட பல இடங்களில் நாய்களுக்காக பூங்கா அமைக்கப் பட்டுள்ளன. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் உதகையில் முதல் முறை யாக நாய்களுக்கான பூங்கா கொண்டு வரப்பட்டுள்ளது. வருவாய் துறைக்கு சொந்தமான உதகை மரவி யல் பூங்காவில் ரூ.42 லட்சம் செல வில் நாய்களுக்காக பிரத்தியேக பூங்கா ஞாயிறன்று திறக்கப்பட்டது. இப்பூங்காவில் நாய்களுக்கு நுழைவு கட்டணமாக ரூ.10 கட்டண மாக வசூலிக்கப்பட உள்ளது. மேலும், இப்பூங்காவில் எதிர் வரும் காலங்களில் நாய் கண்காட்சிக்காக வரும் நாய்களுக்கு பயிற்சி அளிக் கப்படவுள்ளது.</p>
