முந்தய பக்கம்

நீலகிரியில் முதல்முறையாக ஏஐ ஆய்வகம் திறப்பு

6 Dec 2025, 2:48 pm
நீலகிரியில் முதல்முறையாக ஏஐ ஆய்வகம் திறப்பு
<p><strong>நீலகிரியில் முதல்முறையாக ஏஐ ஆய்வகம் திறப்பு</strong></p> <p>உதகை, டிச.6- நீலகிரியில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு ஆய்வகம், உதகையில் உள்ள கிரசென்ட் கேசில் பப்ளிக் பள்ளியில் திறக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகையிலுள்ள கிரசென்ட் கேசில் பப்ளிக் பள்ளியில் அமைக்கப்பட்ட செயற்கை நுண்ண றிவு ஆய்வக திறப்பு விழா வெள்ளி யன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் பாரூக் தலைமை &nbsp;வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் அபிலாஷா &nbsp;கௌர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ஆய்வகத்தை திறந்து வைத்து, அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இன்றைய இளம் தலை முறையினரின் படைப்பாற்றல் திறன் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் உள்ளது. மின் உற்பத்தி அணைகள் எவ்வாறு செயல்படுகிறது? தண்ணீர் சுத்திகரிப்பு எப்படி மேற்கொள்வது? போன்ற அறி வியல் மாதிரிகளை உருவாக்கி காட்சிப் படுத்தியுள்ளனர். தற்போது ஏஐ எனப் படும் செயற்கை நுண்ணறிவு உலகத் தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கி றோம். சரியான சமயத்தில் இதுபோன்ற ஏஐ சார்ந்த ஆய்வகங்கள் இளம் தலை முறையினருக்கு தேவை. இது போன்று அதிக அளவிலான செயற்கை நுண்ண றிவு சார்ந்த ஆய்வகங்கள் நமது மாவட் டத்தில் அமைக்கப்பட வேண்டும், என் றார். முன்னதாக, இந்த அறிவியல் கண் காட்சியில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை யிலான மாணவர்கள் தங்களது படைப்பு களை காட்சிப்படுத்தியிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram