தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் சூடு பிடிக்கும் விறகு வியாபாரம்

23 Mar 2026, 3:39 pm
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால்  சூடு பிடிக்கும் விறகு வியாபாரம்
<p><strong>சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் &nbsp;சூடு பிடிக்கும் விறகு வியாபாரம்</strong></p> <p>நாகர்கோவில். மார்ச். 23- குமரி மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண் டர் தட்டுப்பாட்டால் விறகு வியாபாரம் சூடு பிடித்துள் ளது. அமெரிக்கா- இஸ்ரேல் ஈரான் மீது தொடுத்த போ ரினால் கச்சா எண்ணெய் பொ ருட்கள் வரத்து குறைந்துள் ளது.இதனால் பல அத்தி யாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உய ர்ந்து கொண்டே வருகிறது. இதனைத் தொடர்ந்து வீடு களுக்கு மற்றும் தனியார் பயன்படுத்துவதற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் &nbsp;முன்பை போல் பதிவு செய்தவுடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்பு சிலிண்டர் பதிவு செய்த இரண்டு நாட்களில் சிலிண்டர் வந்து விடும். ஆனால் தற்போது 17 நாட் கள் அதற்கு மேலும் ஆகியும் &nbsp;பலருக்கு பதிவு செய்ய முடியவில்லை. &nbsp;தட்டுபாடு காரணமாக சரியாக சிலிண் டர் வரவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வணிக ரீதி யாக சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துப வர்களுக்கும் அவ்வாறு &nbsp;தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தால் அவர்கள் விற்கும் பொ ருட்களின் விலையும் அதி கரிக்கும் அவாயத்தில் உள்ளது. பலர் உணவ கங்கள் உள்ளிட்ட தனியார் வணிக நிறுவனங்களை மூடும் நிலையும் உள்ளது. வீடுகளுக்கு சமையல் எரி வாயு சிலிண்டர் வழங்கு வதால் அவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கு வது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மண்ணெண்ணெய் வைத்து கூட சமைக்க முடி யாது. மின்சார அடுப்புகளை யும் மின் சாதனங்களையும் கொண்டு உணவு உள்ளிட்ட வற்றை தயாரித்தால் &nbsp;மின் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்து விடுகிறது. மண் அடுப்பு, கற்களை வைத்து விறகு கொண்டு சமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மக்கள் விறகு தேடி &nbsp;அலையும் நிலையும் ஏற் பட்டுள்ளது. விறகு கடைக ளில் விறகு விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவ திக்கு உள்ளாகி வரு கின்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.