தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பட்டாசுத் தொழிலாளர்களின் உயிர் மிக முக்கியம் சிஐடியு கருத்தரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் வலியுறுத்தல்

7 Jun 2026, 10:36 pm
பட்டாசுத் தொழிலாளர்களின் உயிர் மிக முக்கியம் சிஐடியு கருத்தரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் வலியுறுத்தல்

பட்டாசுத் தொழிலாளர்களின் உயிர் மிக முக்கியம் சிஐடியு கருத்தரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் வலியுறுத்தல்

சிவகாசி, ஜூன் 7- பட்டாசுத் தொழிலின் வளர்ச்சி முக்கியமா னது என்றாலும், அதைவிட தொழிலாளர் களின் உயிர் பாதுகாப்பே மிக முக்கியமா னது என விருதுநகர் மாவட்ட வருவாய் அலு வலர் இரா.ஆனந்தி தெரிவித்தார்.

சிஐடியு விருதுநகர் மாவட்ட பட்டாசு மற் றும் தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் சார்பில், “விபத்தில்லாத பட்டாசுத் தொழில் – உயி ரிழப்பு இல்லாத பட்டாசு ஆலை – விதி களுக்கு உட்பட்ட பட்டாசு உற்பத்தி” என்ற நோக்கத்துடன் சிவகாசி அருகே விஸ்வ நத்தத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது.

கருத்தரங்கில் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தி, விருதுநகர் மாவட்டத் தின் பொருளாதார வளர்ச்சியில் பட்டாசுத் தொழில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், அதன் முதுகெலும்பாக தொழிலாளர்களே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தொழிலா ளர்கள் தங்களது உயிர் பாதுகாப்பை முதன் மையாகக் கருதி பணியாற்ற வேண்டும் என் றும், பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து முழு மையான விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

சமீபத்தில் கட்டனார்பட்டி பகுதியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தை நினைவு கூர்ந்த அவர், ஒரு சிறிய தவறும் பல உயி ரிழப்புகளுக்கு காரணமாக முடியும் என்ப தால் ஒவ்வொரு தொழிலாளரும் பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றார்.

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகா தாரத் துறை இணை இயக்குநர் ராஜ்குமார் பேசுகையில், பட்டாசு ஆலைகளில் பணிபுரி யும் தொழிலாளர்கள் பாதுகாப்பு விதிமுறை களை கடைப்பிடிக்க வேண்டிய அவசி யத்தை எடுத்துரைத்தார்.

மூலப்பொருட்கள் கலக்கும் அறைகளில் பணியாற்றுவதை தவிர்ப்பது, இரும்புப் பொருட்களை உற் பத்தி பகுதிகளுக்குள் கொண்டு செல்லாதி ருப்பது, பருத்தி ஆடைகள் அணிவது, அனு மதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் தொழி லாளர்கள் ஒரே அறையில் பணியாற்றாதி ருப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வழி காட்டுதல்களை விளக்கினார். நிகழ்ச்சிக்கு சிஐடியு மாநகர செயலா ளர் கே.பாப்பா உமாநாத் தலைமை வகித் தார்.

மாவட்டத் தலைவர் பி.என்.தேவா கருத்த ரங்கை தொடங்கி வைத்தார். மாவட்ட பொதுச் செயலாளர் எம்.சி.பாண்டியன், சிஐ டியு மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துரை யாற்றினர். நிகழ்ச்சியின் நிறைவில், பட்டாசு ஆலை களில் விபத்துகள் எவ்வாறு ஏற்படுகின்றன மற்றும் அவற்றை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து தொழிலாளர்களுக்கு குறும் படங்கள் மூலம் விளக்கமளிக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.