தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விதிமீறி பட்டாசு தயாரித்த 2 ஆலைகளில் நடவடிக்கை; 3 பேர் கைது

28 Jun 2026, 11:45 pm
விதிமீறி பட்டாசு தயாரித்த 2 ஆலைகளில் நடவடிக்கை; 3 பேர் கைது
<p><strong>விதிமீறி பட்டாசு தயாரித்த 2 ஆலைகளில் நடவடிக்கை; 3 பேர் கைது</strong></p><p>திருவில்லிபுத்தூர், ஜூன் 28- திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சண்முகசுந்தர புரத்தில் உள்ள ஜெயராம் பட்டாசு ஆலை யில் உரிமம் காலாவதியான நிலையி லும் பட்டாசு தயாரிப்பு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், சார்பு ஆய்வா ளர் முருகேஸ்வரி தலைமையிலான போலீ சார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சிவகாசியைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் சிவபாலரத்தினம் ஆகியோர் ஆலையில் பணிபுரிந்தது தெரிய வந்தது. விசாரணையில், ஆலை உரிமம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே காலாவதி யான நிலையிலும் அதிக சம்பளத்திற்காக பணியாற்றி வந்ததாக அவர்கள் தெரி வித்ததாக போலீசார் கூறினர். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், இரண்டு சாக்குகளில் இருந்த பட்டாசுகள் மற்றும் ரூ.1.22 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஆலை உரிமையாளர்களான வடிவேல், ராமச்சந்திரன், ஜெயச்சந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலையில் இருந்த கார் மற்றும் சம்பளப் பதிவேடுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனிடையே, கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாட்டக் குளம்–சல்லிபட்டி அருகே உள்ள வெற்றி பட்டாசு ஆலையிலும் போலீசார் சோதனை நடத்தினர். லைசன்ஸ் இருந்தபோதிலும் பாது காப்பு விதிமுறைகளை மீறி பட்டாசு தயாரிப்புப் பொருட்கள் அலட்சியமாக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஆலையின் மேலாளர், திரு நெல்வேலி மாவட்டம் பெருமாள்பட்டி யைச் சேர்ந்த ராமராஜ் கைது செய்யப் பட்டார். மேலும் ஆலை உரிமையாளர் குமார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தொட ர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.