பரமத்திவேலூரில் தீயணைப்பு நிலையம்
11 Apr 2026, 5:30 am

பரமத்திவேலூரில் தீயணைப்பு நிலையம்

நாமக்கல், ஏப்.10- பரமத்தி வேலூர் மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருக்கும், ஜேடர் பாளையத்தில் தீயணைப்பு நிலையம் கொண்டுவரப்படும் என திமுக வேட்பாளர் கே.எஸ். மூர்த்தி உறுதியளித்தார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.எஸ்.மூர்த்தி, கபிலர்மலை, பரமத்தி, ஜேடர் பாளையத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும். மேலும், இப்பகுதியில் விளையும் விளைபொருட்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும் என உறுதியளித்தார்.