முந்தய பக்கம்

பழவேற்காடு படகில் தீவிபத்து

23 Dec 2025, 4:05 pm
பழவேற்காடு படகில் தீவிபத்து
<p><strong>பழவேற்காடு படகில் தீவிபத்து</strong></p> <p>திருவள்ளூர், டிச.23- பழவேற்காடு அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்த ஜெகன் &nbsp;என்பவரது படகில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை திருவொற்றியூரை சேர்ந்த மீனவர் ஜெகன், &nbsp;தனது படகில் மீன்பிடிக்க திருவள்ளூர் மாவட்டம், பழ வேற்காட்டிற்க்கும், &nbsp;ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் நடுவில் செவ்வாயன்று (டிச.23), மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகில் திடீரென தீப்பற்றி படகில் இருந்த என்ஜின் வலை உள்ளிட்ட உபகரணங்கள் கிடுகிடுவென எரிய ஆரம்பித்துள்ளது. இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் குதித்துள்ளனர். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இவர்களை ராயபுரம் விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களும், &nbsp;பழவேற்காடு பைபர் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களும் காப்பாற்றினர். விபத்தில் சிக்கிய மீனவர்களை பழ வேற்காடு மீனவர்கள் மீட்டு உடனடியாக அங்கிருந்து மற்றொரு படகில் ஏற்றிக்கொண்டு பழவேற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து பழவேற்காட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>
Share
FacebookXWhatsAppTelegram