முந்தய பக்கம்

பெயிண்ட் விற்பனை நிலையத்தில் தீ விபத்து

6 Mar 2026, 3:17 pm
பெயிண்ட் விற்பனை நிலையத்தில் தீ விபத்து
<p><strong>பெயிண்ட் விற்பனை நிலையத்தில் தீ விபத்து</strong></p> <p>அம்பத்தூர், மார்ச் 6- பூந்தமல்லியில் பெயிண்ட், தின்னர் விற்பனை நிலையத்தில் 2 முறை தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பூந்தமல்லி சென்னீர்குப்பம் அணுகுச்சாலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெயிண்ட், தின்னர் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. &nbsp;இந்நிலையில் வியாழக்கிழமை வழக்கம் போல் கடையில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென நிலையத்திற்குள் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் கடையில் இருந்த ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். &nbsp;தகவல் அறிந்து பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல் ஆகிய பகுதிகளில் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த &nbsp;தீயணைப்பு வீரர்கள் ரசாயனம் கலந்த நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். &nbsp; இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பெயிண்ட், தின்னர், வார்னிஷ் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. &nbsp;இது குறித்து பூந்தமல்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். &nbsp;இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இதே நிலையத்தில் மீண்டும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து பூந்தமல்லி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram