முந்தய பக்கம்

சாயத் தொழிற்சாலையில் தீ விபத்து

8 Mar 2026, 3:42 pm
சாயத் தொழிற்சாலையில் தீ விபத்து
<p><strong>சாயத் தொழிற்சாலையில் தீ விபத்து</strong></p> <p>திருப்பூர், மார்ச் 8- பல்லடம் அருகே தனியார் சாயத் தொழிற்சாலையில் ஏற் பட்ட தீ விபத்தில், ரூ.3 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் &nbsp;தீக்கிரையாகின. திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், கரைப்புதூர் &nbsp;ஊராட்சி, அருள்புரத்தை அடுத்த பாச்சாகாட்டுபாளையத் தில் தனியார் சாயத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. &nbsp;தொழிலாளர்கள் வழக்கம்போல சனியன்று பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, ஆயில் பாய்லர் இயந்திரத்தில் மின் கசிவு &nbsp;காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் &nbsp;தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது. தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாததால், பல்லடம் தீய ணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் &nbsp;சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமையிலான வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இவ்விபத்தில் ரூ.3 கோடி &nbsp;மதிப்பிலான இயந்திரங்கள், துணிகள் உள்ளிட்டவை எரிந்து &nbsp;சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து &nbsp;போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு &nbsp;வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram