மணலி துணை மின் நிலையத்தில் தீ விபத்து மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் ஆய்வு
15 Dec 2025, 2:48 pm
<p><strong>மணலி துணை மின் நிலையத்தில் தீ விபத்து மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் ஆய்வு</strong></p>
<p>சென்னை, டிச.15 மணலி விரைவுச் சாலை யில் எம்.எஃப்.எல். (MFL) நிறுவனம் அருகே அமைந் துள்ள 400 கே.வி., 230 கே.வி. மற்றும் 110 கே.வி. திறன் கொண்ட துணை மின் நிலை யம் உள்ளது. சென்னை நக ரின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த துணை மின் நிலைய த்திலிருந்து மின்சாரம் விநி யோகிக்கப்படுகிறது. இந்நிலையில், ஞாயிற்று க்கிழமை (டிசம்பர் 14) காலை 6 மணியளவில் துணை மின் நிலையத்திற்கு வெளியே இருந்த இரண்டு டிரான்ஸ்பார்மர்களில் ஒன்று வெடித்ததில் தீ விபத்து ஏற் பட்டது. இதனால் அப்பகுதி களில் சில இடங்களில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற் பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், மணலி மற்றும் மாதவரம் பகுதிகளில் இருந்து நான்கு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர் கள், புகையை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, தமிழ் நாடு மின்சார வாரியத் தலை வரும் நிர்வாக இயக்குந ருமான ராதாகிருஷ்ணன், உடனடியாகச் சம்பவ இடத் திற்கு நேரில் வந்து பார்வை யிட்டு, அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.<br />
</p>
