சூரத் சூரத்தில் தீ விபத்து : 5 பேர் பலி
31 Mar 2026, 4:26 pm
<p><strong>சூரத் சூரத்தில் தீ விபத்து : 5 பேர் பலி </strong></p>
<p>குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள லிம்பாயத் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் செவ்வாயன்று மாலை 5 மணி யளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாப மாக உயிரிழந்தனர். மின்கசிவு காரண மாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்க லாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. அதே போல காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், தீ விபத்து ஏற் பட்டது ஒரு காரணம் என்றாலும், வீட்டில் அதிகப்படியான புடவைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் புடவை கள் எளிதில் தீப்பற்றி அடர்ந்த புகையை உண்டாக்கியது. ஐந்து பேரும் தீக்கா யங்களால் உயிரிழந்ததை விட, கடும் புகையைச் சுவாசித்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.</p>
