முந்தய பக்கம்

தீ விபத்து: 30 ஆடுகள் கருகிப் பலி

12 Nov 2025, 3:20 pm
தீ விபத்து: 30 ஆடுகள் கருகிப் பலி
<p><strong>தீ விபத்து: 30 ஆடுகள் கருகிப் பலி</strong></p> <p>பொள்ளாச்சி, நவ. 12- பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம் பகுதியில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆட்டுப்பட்டியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், அதில் பரா மரிக்கப்பட்டு வந்த 30 ஆடுகள் பரிதாபமாகத் தீயில் கருகி &nbsp;உயிரிழந்தன. &nbsp;பொள்ளாச்சியை அடுத்த பெரிய நெகமம் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் ஆடு வளர்ப்பைத் தங்கள் முக்கிய வாழ்வாதாரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த &nbsp;பகுதியைச் சேர்ந்த விவசாயி நித்தின் மற்றும் அவரது மனைவி &nbsp;மாலதி பிரியா ஆகியோர், தங்கள் விவசாயத் தோட்டத்து வீட்டுக்கு முன் பகுதியில் பரண் அமைத்து 30-க்கும் மேற்பட்ட &nbsp;ஆடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், செவ்வாயன்று இரவு, வழக்கம்போல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென ஆட்டுக் குட்டிகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே வெளியில் &nbsp;வந்து பார்த்தபோது, பரண் அமைப்பும் ஆடுகளும் மளமள வெனத் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை &nbsp;அணைக்க முற்பட்டனர். எனினும், தீ வேகமாகப் பரவியதில், &nbsp;பரணில் இருந்த 30 ஆடுகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரி ழந்தன. இதையடுத்து, தகவல் அறிந்து விரைந்து வந்த தீய ணைப்புத் துறையினர், மேலும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவம் குறித்து நெகமம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்து மின் கசிவு காரணமா அல்லது வேறு &nbsp;ஏதேனும் காரணத்தினால் ஏற்பட்டதா என தீவிர விசாரணை &nbsp;மேற்கொண்டு வருகின்றனர். ஆடுகளை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவ சாயி குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க &nbsp;வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram