தீவிபத்து
23 Apr 2026, 12:28 am
<p>கோவை, ஏப்.22- கடும் வெயிலின் தாக்கம் காரணமாக அன்னூர் அருகே உள்ள ஒரு பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீ பற்றி எரிந்து கரும்புகை சூழ்ந்தது. கோவை மாவட்டம், அன்னூர் அருகே குறுக்கிலி யாம் பாளையம் பகுதியில் ராஜன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு எடுத்து பழைய பிளாஸ்டிக் சேகரித்து வைக்கும் குடோன் ஒன்று உள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து சேகரித்து வந்து விற்க பழைய பிளாஸ்டிகை திறந்த வெளி யில் இருப்பு வைத்துள்ளனர். இந்நிலையில் அன்னூர் பகுதியில் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில், வெயிலின் தாக்கம் காரண மாக இந்த பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீ பற்றி கரும்புகை வெளியேறியது. பின்னர் தீ மளமளவென பரவ ஆரம்பித்து அந்த பகுதி முழுவதும் தீ பற்றி எரிந்து கரும்புகை சூழ்ந்தது. அந்த பகுதியில் இருப்பு வைக் கப்பட்டிருந்த சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து முழுவதும் எரிந்து சேத மானது. பின்னர் இது குறித்து அன்னூர் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலை யில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத் தனர்.</p>
