சென்னை விரைவு செய்திகள்
21 Jan 2026, 3:58 pm

தொல்காப்பிய பூங்காவில் சாமான்ய மக்கள் நுழைய முடியாத நிலைக்குத் தீர்வு காணுக

சென்னை, ஜன.21- சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ரூ.42.4 கோடி பொதுப்பணத்தில் சீரமைக்கப்பட்ட 58 ஏக்கர் பரப்பளவு கொண்ட தொல்காப்பிய பூங்கா, தற்போது சில குறிப்பிட்ட நபர்களின் ‘தனி யார் நடைப்பயிற்சி கிளப்’ போல மாறி விட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை ஒரு நேரத்திற்கு 250 பேர் மட்டுமே என அனுமதி வழங்கியுள்ள நிலையில், ஆர்ஏ புரம், எம்ஆர்சி நகர் மற்றும் சாந்தோம் பகுதிகளைச் சேர்ந்த வழக்கமான நடைப்பயிற்சியாளர்கள் மாதாந்திர மற்றும் வருடாந்திர பாஸ்கள் மூலம் ஏப்ரல் 20 வரை அனைத்து நேரங்களையும் முன்பதிவு செய்துவிட்டனர். இதனால் வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் பூங்காவிற்குள் செல்ல முடியாமல் நுழைவாயிலிலேயே திருப்பி அனுப்பப்படுகின்றனர். இது குறித்துப் பேசிய வன அதிகாரி ஒருவர் 250 பேர் என்ற வரம்பு இருப்ப தால் ஏப்ரல் 20-க்குப் பிறகே அடுத்தகட்ட முன்பதிவு தொடங்கும் எனத் தெரிவிக்கிறார். ஆனால், பொதுமக்களுக்கான பூங்கா வில் விஐபிக்களுக்கு முன்னுரிமை அளிக்கா மல், மாதாந்திர மற்றும் தினசரி டிக்கெட்டு களுக்கு 50:50 என்ற விகிதத்தில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சமுக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆண் குழந்தையை விற்ற தாய் உள்பட 4 பெண்கள் கைது

சென்னை, ஜன. 21- சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த திலகவதி (25) என்பவர், தனது ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை வறுமை காரணமாக 3.80 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். ஈரோட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இந்தக் குழந்தையை விற்பனை செய்ய தண்டையார்பேட்டை பிரதீபா (32), காசிமேடு வெண்ணிலா (45) மற்றும் வண்ணாரப்பேட்டை கவுசல்யா (40) ஆகியோர் தரகர்களாகச் செயல்பட்டுள்ளனர். இதில் தாய்க்கு 3 லட்சம் ரூபாயும், மீதமுள்ள தொகையை மற்ற மூவரும் பங்குகளாகப் பிரித்துக்கொண்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ரகசியத் தகவலின் பேரில் அதிரடி நடவடிக்கை எடுத்த காசிமேடு போலீசார், நான்கு பெண்களையும் கைது செய்து ‘சைல்ட் வெல்பேர் கம்யூனிட்டி’ அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

84 ரவுடிகள் கைது; 25 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை, ஜன. 21- ஆவடி காவல் ஆணை யரக எல்லைக்குட்பட்ட பகு திகளில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த, ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில் கடந்த 15 நாட்களில் சிறப்பு அதிரடி வேட்டை நடத்தப்பட்டது. இதில் ஆவடி காவல் மாவட்டத்தில் 39 ரவுடி களும், செங்குன்றம் காவல் மாவட்டத்தில் 45 ரவுடி களும் என மொத்தம் 84 சரித்திர பதிவேடு குற்ற வாளிகள் கைது செய்யப் பட்டனர். போதைப் பொருட்க ளுக்கு எதிரான நட வடிக்கையில், கஞ்சா விற்பனை தொடர்பாக 12 வழக்குகளில் 19 பேர் கைது செய்யப்பட்டு 25.55 கிலோ கஞ்சாவும், குட்கா தொடர்பாக 6 வழக்குகளில் 6 பேர் கைது செய்யப்பட்டு 30.337 கிலோ குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டன.

செங்கல்பட்டில் டிரோன் பறக்க தடை

செங்கல்பட்டு,ஜன. 21- செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வரும் 23ம் தேதி அன்று நடை பெறவிருக்கும் அரசியல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி வருகை தர இருப்பதால் ஜனவரி 21 முதல் 23 வரை பாதுகாப்பு காரணங்களுக்காக செங்கல்பட்டு மாவட்ட த்திற்குட்பட்ட பகுதிகளில் “டிரோன்” பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா தெரி வித்துள்ளார்.

செங்கல்பட்டு உரக்கடைகளில் ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை

செங்கல்பட்டு, ஜன.21- செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், புழுதிவாக்கம், நெல்வாய் கூட்ரோடு, படாளம் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் நெல் மற்றும் காய்கறி பயிரிடும் விவசாயிகள், தனியார் உரக்கடைகளில் யூரியா மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களைத் தனியாக வழங்க மறுப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர். உரங்களுடன் தேவையற்ற பூச்சிக்கொல்லி மருந்துகள் அல்லது குருணைகளை வாங்கினால் மட்டுமே உரம் தருவோம் என உரக்கடை உரிமையாளர்கள் கட்டாயப்படுத்துவதால், மதுராந்தகம் வட்டார விவசாயிகள் பொருளாதார ரீதியாகவும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். எனவே, மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் இப்பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் உரிய ஆய்வு நடத்தி, விவசாயிகளின் தேவைக்கேற்ப உரங்களை மட்டும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை ரயில்வே வாரியம் இறுதி கட்ட ஒப்புதல்

சென்னை, ஜன. 21- பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்குவதற்கு ரயில்வே வாரியம் இறுதிகட்ட ஒப்புதலை வழங்கியுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தின் ஒரு பகுதியாக, பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 26 கி.மீ வழித்தடத்தில் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், முதற்கட்டமாக பூந்தமல்லி - வடபழனி இடையேயான 15.8 கி.மீ தூரத்திற்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது. ஏற்கெனவே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் மற்றும் 90 கி.மீ வேகத்திலான பாதுகாப்பு சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், பிப்ரவரி மாதம் முதல் இந்தப் பாதையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சை

சென்னை, ஜன.21- சிதம்பரத்தைச் சேர்ந்த 54 வயது முடிதிருத்தும் தொழிலாளிக்கு இதயத்தின் முக்கிய ரத்தக் குழாயான பெருந்தமனியில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பைக் குணப்படுத்த, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதன்முறையாகச் சிக்கலான ‘பெருந்தமனி வளைவு மாற்று அறுவை சிகிச்சை’ வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்ட இந்த சிகிச்சையை, சுமார் 10 மணி நேரம் போராடி பேராசிரியர் மாரியப்பன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் எவ்வித நரம்பியல் அல்லது உறுப்பு பாதிப்புமின்றிச் செய்து முடித்தனர். தனியார் மருத்துவமனையில் ரூ.25 லட்சம் வரை செலவாகும் இந்த உயர்ரக சிகிச்சையை அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக முடித்து உயிர்காத்த தமிழக அரசுக்கும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் பயனாளி நன்றி தெரிவித்துள்ளனர்.

எலி மருந்து சாப்பிட்ட பெண்ணை காப்பாற்றிய ஆர்பிஎப்

சென்னை, ஜன. 21– சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 11-வது நடை மேடையில் ரோந்து பணியில் இருந்த ரயில்வே பாது காப்புப்படை பெண் காவலர் ஜிஷா, அங்கு அழுது கொண்டிருந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒரு வரை விசாரித்தபோது, அவர் தனது சகோதரர் மறைவால் ஏற்பட்ட மனஅழுத்தத்தில் எலி மருந்து உட்கொண்டதை அறிந்தார். உடனடியாகச் செயல்பட்ட காவலர் ஜிஷா, அரசு ரயில்வே காவல் பணியாளர்களின் உதவியுடன் அந்தப் பெண்ணை மீட்டு முதலுதவி அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பெண் காவ லரின் இந்த மனிதாபிமான மற்றும் துரித நடவடிக்கை யினால் அந்தப் பெண்ணின் உயிர் உரிய நேரத்தில் காப்பாற்றப்பட்டதுடன், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.