தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

14 Nov 2025, 1:26 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சிறந்த எழுத்தாளர்களுக்கு நிதி உதவி

திருப்பூர், நவ.14- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம்  தோற்றுவிக்கப்பட்டு அச்சங்கம் மூலம்  சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தெரிவு செய்து ரூ.1  லட்சமாக நிதி உதவியை உயர்த்தி வழங்கிட அரசு ஆணையிட் டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மனிஷ்நாரணவரே தெரி வித்துள்ளதாவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூ கத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியம் தொடர்பான  திறனை மேம்படுத்தி உயர்த்தும் நோக்கில்,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம்   தோற்றுவிக்கப்பட்டு அச்சங்கம் மூலம் 11 சிறந்த எழுத்தாளர்க ளின் படைப்புகளை தெரிவு செய்து அவர்களுக்கு ரூ.1 லட்சம்  நிதி உதவி வழங்க அரசு ஆணையிடப்பட்டுள்ளது. தகுதி யுள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கான விண்ணப்பங்களை திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வேலை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம், மேலும், tn.gov.in என்ற இணையதளத்திலும்  (website) (or) https://www.tn.gov.in/form பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், விண்ணப்பிக்க கடைசி நாள் நவ.28 என குறிப்பிட்டுள்ளார்.

சர்க்கரை பரிசோதனை

முகாம் திருப்பூர், நவ.14- உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு  திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இலவச  சர்க்கரை பரிசோதனை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை முகாம் வெள்ளியன்று நடைபெற்றது. ஆண்டுதோறும் நவம்பர் 14 ஆம் தேதி உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகி றது. அதன்படி ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோ தனை முகாம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்  நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட முதன்மை அமர்வு  நீதிமன்ற பொறுப்பு நீதிபதி பத்மா, மாவட்ட சட்டப்பணிகள் குழு செயலாளர் சந்தோஷ் ஆகியோர் துவக்கி வைத்த னர். இதில், நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள் வழக்கறி ஞர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் உதவியாளர்கள் என அனைவருக்கும் சர்க்கரை நோய் அளவு குறித்தும், இரத்த  அழுத்தம் குறித்தும் பரிசோதனை செய்யப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.