புலம்பெயர் தொழிலாளி குடும்பத்திற்கு நிதி உதவி
18 May 2026, 10:52 pm
<p><strong>புலம்பெயர் தொழிலாளி குடும்பத்திற்கு நிதி உதவி</strong></p><p> நாகர்கோவில், மே 18- குமரி மாவட்டம் கண்ணுமாமுடு அருகே உள்ள பரவூரைச் சேர்ந்தவர் கிளிட்டர்ஸ். இவர் சவுதி அரேபியாவில் பணியின் போது உயிரிழந்தார். அவ ரது குடும்பத்திற்கு பிரவாசிகள் (புலம் பெயர்ந்தோர்) சங்கம் சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது. அதற்கான காசோலை யை, சிபிஎம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்டச் செயலாளருமான ஆர் செல்ல சாமி கிளிட்டஸின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள். என் உஷா பாசி. வி அனந்தசேகர், பளுகல் வட்டார செயலாளர் சங்கர், பிரவாசி சங்க செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
