திருச்சி விரைவு செய்திகள்
10 Feb 2026, 4:50 pm

நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

காரியாபட்டி, பிப்.10- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் காரியபட்டி, தோணுகால், கல் குறிச்சி, மல்லாங்கிணறு ஆகிய பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்கு நிதி, சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், திமுக ஒன்றிய கழகச் செயலாளர்கள், பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாதர் சங்க புதிய கிளை அமைப்பு

திருச்சுழி, பிப்.10- திருச்சுழி அருகேயுள்ள தொப்புலாக்கரையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதிய கிளை அமைக்கப்பட்டது. கிளைத் தலைவராக தேவி, செயலாளராக ராஜேஸ் வரி, பொருளாளராக சுப்புலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மத்திய குழு உறுப்பினர் எஸ்.லட்சுமி, மாவட்டச் செயலாளர் என்.உமாமகேஸ்வரி ஆகியோர் விளக்கிப் பேசினர்.

போதைப்பொருள் வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சிவகங்கை, பிப்.10- சிவகங்கை மாவட்டத்தில் போதைப்பொருள் வழக்கு களில் தொடர்புடைய இருவர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காளை யார்கோவில் காவல்நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய கீழ வாணியங்குடி கிரா மத்தைச் சேர்ந்த செல்வம் மகன் மணிவண்ணன் என்பவர், பொது அமைதிக்கும் சமூக நலனுக்கும் இடையூறு விளை விப்பவர் எனக் கருதப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதேபோல், இளையான்குடி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு போதைப்பொருள் வழக் கில் தொடர்புடைய மேல வாணியங்குடி கிராமத்தைச் சேர்ந்த பிரபு மகன் மணிஷ் (21) என்பவரும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட் டுள்ளார். போதைப்பொருள் குற்றங்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில், தொடர்ந்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப் படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் கடை ஊழியரின் இருசக்கர வாகனம் திருட்டு

இளைஞர் கைது இராஜபாளையம், பிப்.10- விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (42) என்பவர், ரயில்வே பீடர் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், தினசரி பணிக்கு வரும்போது தனது இருசக்கர வாகனத்தை கடை எதிரில் உள்ள வணிக வளாகங்கள் முன்பாக நிறுத்தி விட்டு பணி யாற்றுவது வழக்கம். சம்பவத்தன்று பணியை முடித்து வீடு திரும்பிய போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனம் காணாமல் போனது. இதுகுறித்து சதீஷ்குமார் இராஜபாளையம் தெற்கு காவல்நிலை யத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி களை ஆய்வு செய்யப்பட்டு, துரைச்சாமிபுரம் தெருவைச் சேர்ந்த நல்லதம்பி (35) என்பவர் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நல்லதம்பியை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட இருசக்கர வாக னத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியதில், 15 நாள் நீதிமன்றக் காவ லில் வைக்க உத்தரவிடப்பட்டது

. கஞ்சா விற்றதாக ஒருவர் கைது 400 கிராம் கஞ்சா பறிமுதல்

இராஜபாளையம், பிப்.10- விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சேத்தூர் ஊரக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சேத்தூர் ஊரக காவல் ஆய்வாளர் தலைமையில் காவல் சார்பாளர் ஜோதி உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி சோதனை செய்ததில், பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் வைத்திருந்த 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அவர் இராஜபாளையம் கணபதி சுந்தரனாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் (26) என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, போலீசார் கனகராஜை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதில், 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பழைய இரும்பு கடையில் தீவிபத்து

விருதுநகர், பிப்.10- விருதுநகர் கலைஞர் நகரைச் சேர்ந்தவர் சிவ கார்த்தி. இவர் விருதுநகர் பாவாலி சாலையில் பழைய பேப்பர் இரும்பு சாமான்கள் வாங்கும் கடை வைத்துள் ளார். இவருக்கு சொந்தமான குடோன் ஒன்று புல்ல லக்கோட்டையில் உள்ளது. இதில் திடீரென தீப்பற்றியது. தகவலறிந்து விரைந்து வந்த விருதுநகர் தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடித் தீயை அணைத்த னர். இதில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது.

200 மாணவ–மாணவியர் படிக்கும் பள்ளிக்கு சுற்றுச்சுவர், கழிப்பறை வசதி கோரி மனு

சிவகங்கை, பிப்.10- 200 மாணவ–மாணவிகள் படிக்கும் அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் கழிப் பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி களை செய்து தர வேண்டும் என ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சிஐடியு) மாவட்டத் தலைவர் கருப்பு, சிவகங்கை மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா ஆவரங்காடு கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நடு நிலைப் பள்ளியில் 200 மாணவ–மாணவி கள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால், பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் போதிய கழிப்பறை வசதி இல்லாததால் மாணவ–மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, பள்ளிக்கு தேவையான நிதியை ஒதுக்கி சுற்றுச்சுவர், கழிப்பறை உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும். அதே போல், ஆவரங்காடு கிராம மக்களின் சுகா தாரத்தை கருத்தில் கொண்டு குளியல் தொட்டி அமைத்துத் தர வேண்டும். மேலும், கிராமத்தில் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல மயானச் சாலை, எரி மேடை, மின்விளக்கு வசதிகளையும் ஏற் படுத்தி தர வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அடிப்படை வசதிகளை நிறை வேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

இளம்பெண் கொலை: காதலன் கைது

தேனி, பிப்.10- பெரியகுளம் அருகே இளம்பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில், அவரது காதலனை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெரியகுளம் ஒன்றியம் பொம்மிநாயக்கன்பட்டி இந் திரா காலனியைச் சேர்ந்த சிலம்பரசன் மனைவி சக்திமாரி யம்மாள் (31). இவர்களுக்கிடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலை யில், சக்திமாரியம்மாள் இதே பகுதியைச் சேர்ந்த ராஜா (31) என்பவருடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இரு வருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரி கிறது. சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலை யில், ராஜா அரிவாள்மனையால் சக்திமாரியம்மாளின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, உயிரிழந்த சக்திமாரியம்மாளின் தாயார் சக்கம்மாள் அளித்த புகாரின் பேரில், ஜெயமங்கலம் காவல் ஆய்வாளர் அமுதா வழக்குப் பதிவு செய்து ராஜா வை கைது செய்தார். கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

ஆண்டிபட்டி அருகே போதை மாத்திரைகள் விற்பனை 2 வாலிபர்கள் கைது

தேனி,‌ பிப்.10- ஆண்டிபட்டி அருகே தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்ற 2 வாலி பர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களி டமிருந்து ரூ.20,000 மதிப்பிலான மாத்திரைகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆண்டிபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் காவலர்கள் குமாரபுரம் குப்பை மேடு மயானம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டூவீலர் வாகனத்தில் சந்தேகப்படும் படி வந்த இரண்டு நபர்களை நிறுத்தி சோதனை செய்த னர். அவர்களிடம் நடத்திய சோதனையில், அரசினால் தடை செய்யப்பட்ட டேபெண்டாடோல் ரக போதை மாத்திரைகள் 100 எண்ணிக்கையில் இருப்பது கண்டறி யப்பட்டது. விசாரணையில் அவர்கள், கொண்டமநாயக் கன்பட்டி என்ஜிஓ நகரை சேர்ந்த மதுரைவீரன் மகன் அமிர்தராஜ், டி.பொம்மிநாயக்கன்பட்டி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் ராம்குமார் என்பது தெரியவந்தது. இவர்கள் ஆன்லைன் மூலம் போதை மாத்திரை களை வாங்கி, தாங்களும் பயன்படுத்திக் கொண்டு, லாபத்திற்காக மற்றவர்களுக்கும் விற்பனை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரு வரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து,‌ சுமார் ரூ.20,000 மதிப்பிலான 100 போதை மாத்திரைகள்,‌ கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலர் வாகனம்‌, இரண்டு விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றை‌ கைப் பற்றினர். உதவி காவல் ஆய்வாளர் தேர்வு வழக்கு

தேர்வாணைய தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, பிப்.10- உதவி காவல் ஆய்வாளர் பணியிடத் தேர்வில் தவறான விடைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 4 வினாக்க ளுக்கு தலா 0.5 மதிப்பெண்கள் வழங்கக் கோரிய வழக் கில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கார்த்திக், சசிகலா, ஜான் கோவில் பிள்ளை ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வா ணையம் நடத்திய உதவி காவல் ஆய்வாளர் தேர்வில் நான்கு வினாக்களுக்கு தவறான விடைகள் வழங்கப் பட்டதாகவும், அதற்காக தலா 0.5 மதிப்பெண்கள் வழங்கக் கோரி மனு அளித்திருந்த போதிலும், அதனை தேர்வாணை யம் பரிசீலிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தனர். எனவே, சம்பந்தப்பட்ட நான்கு வினாக்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி புகழேந்தி, வழக்கு தொடர்பாக தமிழ்நாடு சீருடை பணி யாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதிலளிக்க உத்தர விட்டு, வழக்கை மார்ச் மாதத்தின் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

தந்தை மகனை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

போடி, பிப்.10- போடி சர்ச் தெருவில் வசிப்பவர் பவுல்ராஜ் மகன் சத்தியபிரகாஷ் (27). இவருக்கும் கோம்பையை சேர்ந்த ஜேகோப் மகள் ஜெனிசாவுக்கும் திருமணம் நடந்து இரு வரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குடும்ப பிரச்சனை குறித்து பேசுவதற்காக ஜெனிசா, இவரது பெற்றோர் ஜேகோப், ஜெயப்பிரியா, ஜெனிசாவின் சின்னம்மா முத்து மாரி ஆகியோர் வந்துள்ளனர். இதில் சண்டை ஏற்பட்டு 4 பேரும் சேர்ந்து பவுல்ராஜையும், சத்தியபிரகாசையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் போடி நகர் காவல் நிலைய போலீசார் ஜெனிசா உள்பட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசா ரிக்கின்றனர்.

மாணவனை தாக்கியவர் கைது

போடி, பிப்.10- போடி கீழத்தெருவை சேர்ந்தவர் முத்து மனைவி லதா (47). இவரது 15 வயது மகன் இங்குள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவரிடம் இதே பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் அஜித் என்பவர் சிகரெட் வாங்கி வரக் கூறியுள்ளார். மாணவர் மறுத்துள் ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜித் மாணவரை கட்டை யால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து புகாரின் பேரில் போடி நகர் காவல் நிலைய போலீ சார் அஜித் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

ஊரக வளர்ச்சித்துறையினர் வேலைநிறுத்தம் தொடங்கியது

தேனி, பிப்.10- ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள 1500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் மற்றும் ஓட்டுநர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அனைத்து காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தி னர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் பங்க ளிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைப்பதோடு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும்.பணி மேற்பார்வையாளர்களுக்கு 7 ஆண்டு முடிவில் தரம் உயர்த்துதல் மற்றும் உதவிப் பொறியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். சத்துணவு திட்டத் தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். தங்களது நியாயமான கோரிக்கைகளை அரசு நிறை வேற்ற வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டம் செவ்வாயன்று தொடங்கியது. தேனி மாவட்டத்தில் உள்ள 8 வட்டார வளர்ச்சி அலுவல கங்கள், மாவட்ட ஊராட்சி முகமை உள்ளிட்ட அலுவல கங்களில் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் பணிகள் பாதிக்கப்பட்டு வெறிச்சோடி கானப்பட்டது. ஊரக வளர்ச்சித்துறையில் 439 பேரில் 228 பேர் பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.