முந்தய பக்கம்

இன்று வெளியாகிறது  இறுதி வாக்காளர் பட்டியல்

22 Feb 2026, 3:26 pm
இன்று வெளியாகிறது  இறுதி வாக்காளர் பட்டியல்
<p><strong>இன்று வெளியாகிறது &nbsp;இறுதி வாக்காளர் பட்டியல்</strong></p> <p>சென்னை, பிப்.22 - தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ர வரி 23 அன்று வெளியிடப்பட வுள்ளது. &nbsp;தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நா யக் மாவட்ட அளவிலான தரவுகளை காலை 10 மணிக்கு வெளியிடுவதைத் தொடர்ந்து, மாநில அளவி லான இறுதிப் பட்டியலை பின்னர் வெளியிடுவார். கடந்த நவம்பர் 4 முதல் தொடங்கிய சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (எஸ்.ஐ. ஆர்.) 97 லட்சத்து 37 ஆயி ரத்து 832 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. &nbsp;இதன் காரணமாக 6.41 கோடியாக இருந்த வாக்கா ளர் எண்ணிக்கை 5.44 கோடியாகக் குறைந்தது. நீக்கப்பட்டவர்களுள் இறந் தோர் 26 லட்சத்து 94 ஆயிரம் பேர், நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் 66 லட்சத்து &nbsp;44 ஆயிரம் பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3 லட்சத்து 39 ஆயிரம் பேர் என்று தேர்தல் துறை தெரி வித்துள்ளது. டிசம்பர் 19 முதல் பிப்ர வரி 10 வரை வாக்காளர் பட்டி யல் திருத்தத்திற்காக மொத்தம் 34 லட்சத்து 75 &nbsp;ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்துள்ளனர். &nbsp;தற்போது வாக்காளர் எண்ணிக்கை சுமார் 5 கோடியே 65 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. &nbsp;வாக்காளர் பட்டி யலில் பெயரை voters.eci.gov.in, electoralsearch.eci.gov.in மற்றும் தேர்தல் ஆணைய செயலியில் சரி பார்க்கலாம்.</p>
Share
FacebookXWhatsAppTelegram