முந்தய பக்கம்

புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

14 Feb 2026, 8:46 am
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியானது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 9,44,211 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தொடர்ந்து டிச.16-ஆம் தேதி வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 1,03,467 தகுதியற்ற வாக்காளர்கள் வரைவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, டிச.16-ஆம் தேதி முதல் ஜன.19-ஆம் தேதி வரை உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலில், 42,719 தகுதியுள்ள வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்; 16,619 தகுதியற்ற வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
இதை தொடர்ந்து இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 9,44,211 ஆக உயர்ந்துள்ளது. வாக்காளர் பட்டியலில் ஆண்கள் 4,43,595 பேரும், பெண்கள் 5,00,477 பேரும், மாற்று பாலினத்தவர் 139 பேரும் இடம்பெற்றுள்ளனர். புதிய வாக்காளர்கள், வரைவு வக்காளர் பட்டியலில் விடுபட்டவர் என மொத்தம் 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 1,227 பேர் வேறு மாநிலத்திற்கு புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் 16,619 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் தொடர்பான எந்தவொரு விளக்கத்திற்கும், பொதுமக்கள் 1950 என்ற பிரத்யேக கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Share
FacebookXWhatsAppTelegram