விளையாட்டுத் திடலின் இறுதிக்கட்டப் பணிகள்
7 Mar 2026, 2:36 pm
<p><strong>விளையாட்டுத் திடலின் இறுதிக்கட்டப் பணிகள்</strong></p>
<p>வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி, அகத்தியர் நகரில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் விளையாட்டுத் திடலின் இறுதிக்கட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர். கௌஷிக், மண்டலக் குழுத்தலைவர் கூ.பீ.ஜெயின், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.</p>
