இன்று வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்!
9 Apr 2026, 5:30 am

இன்று வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்!

சென்னை, ஏப். 8 - தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று (ஏப்ரல் 9) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30 அன்று துவங்கி ஏப்ரல் 6 அன்று நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 7 அன்று மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உட்பட மொத்தம் 7,599 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் 2,490 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 5,079 மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது.