முந்தய பக்கம்

திரைப்பட இயக்குநர் வி. சேகர் காலமானார்!

14 Nov 2025, 1:26 pm
திரைப்பட இயக்குநர் வி. சேகர் காலமானார்!
<p><strong>திரைப்பட இயக்குநர் வி. சேகர் காலமானார்!</strong></p> <p>சென்னை, நவ. 14 - புகழ்பெற்ற தமிழ் திரைப் பட இயக்குநர் வி. சேகர் சென்னையில் வெள்ளிக் கிழமை (நவ.14) அன்று கால மானார். அவருக்கு வயது 72. உடல் நலக்குறைவுக் காரணமாக கடந்த பத்து நாட்களுக்கு மேலாக ராமச் சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1990ஆம் ஆண்டு நீங்களும் ஹீரோ தான் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுக மானவர் வி.சேகர். &ldquo;பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டணா செலவு பத்தணா&rdquo; போன்ற குடும்பப் பாங்கான வெற்றிப் படங்களை இயக்கி யவர் வி. சேகர். நடுத்தர வர்க்க குடும்பங்களில் நாள் தோறும் நிகழும் எற்ற இறக்கங் களை நகைச்சுவை உணர் வோடும் உணர்ச்சிபெருக்கு டனும் &nbsp;தனது திரைப்படங்க ளில் காட்சிப்படுத்தியவர். &nbsp; காமெடி ஜாம்பவன் களான வடிவேலுவையும், விவேக்கையும் ஒரே படத் தில் நடிக்க வைத்து ரசிகர் களுக்கு குடும்ப உணர்வை நகைச்சுவையோடு கொடுத்தவர் வி.சேகர். இயக்குநர் வி. சேகரின் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற் படுத்தி உள்ளது. &ldquo;எண். 5 டாக்டர் சுப்பராயன் நகர், சாமி யார் மடம் பேருந்து நிறுத்தம், கோடம்பாக்கம் பவர் &nbsp;அவுஸ், சென்னை&rdquo; இல்லத் தில் வைக்கப்பட்டுள்ள வி.சேகரின் உடலுக்கு திரைத் துறையினர், இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சி யினர், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram