முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

17 Dec 2025, 4:11 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

திரைப்பட இயக்குநர் கௌஹர் ரசா

பீகாரில் நடந்த எஸ்ஐஆர் பணி தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை என பெருமையாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருக்கிறது. நேர்மையாக நடந்திருந்தாலும் குறைகள் இருந்திருக்கும். புகார்கள் வந்திருக்கும். பீகாரில் புகார் வரவில்லை எனில், இவர்களிடம் முறையிட்டு எதுவும் நடக்கப் போவதில்லை என மக்கள் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்றுதான் அர்த்தம்.

ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங்

மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தி பெயரை நீக்கியிருப்பதன் மூலம், தங்களின் கொள்கைத் தலைவர் காந்தி அல்ல, கோட்சேதான் என்பதை உறுதி செய்திருக்கிறது பாஜக.

மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி

நேஷனல் ஹெரால்டு வழக்கில், அரசியல் பழிவாங்கும் நோக்கத்தால் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தில்லி நீதிமன்றம் ஏற்க மறுத்து, வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் மோடி அரசின் சட்டவிரோத நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

ஊடகவியலாளர் ரன்விஜய் சிங்

ஒருவேளை, நிதிஷ் செய்த வேலையை பிற கட்சிகளை சேர்ந்த ஒருவர் செய்திருந்தால், என்ன ஆகியிருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். பல ஊடகங்களும்  ஊடகவியலாளர்களும் உச்ச குரலில் அலறியிருப்பார்கள். ஆனால் சம்பவத்தை செய்தது சொந்த முகாமை சேர்ந்தவர் என்பதால் மயான அமைதி நிலவுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram