முந்தய பக்கம்

ஐடிஐயில் தொழிற்நுட்ப காலிப்பணியிடங்களை நிரப்பிடுக

7 Feb 2026, 5:37 pm
ஐடிஐயில் தொழிற்நுட்ப காலிப்பணியிடங்களை நிரப்பிடுக
<p><strong>ஐடிஐயில் தொழிற்நுட்ப காலிப்பணியிடங்களை நிரப்பிடுக</strong></p> <p>கோவை, பிப். 7- ஐடிஐ-யில் உள்ள தொழிற்நுட்ப காலிப்பணி யிடங்களை நிரப்பிட வேண் டும் என தொழிற்பயிற்சி அலு வலக உதவியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. &nbsp;தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலுவலக உதவியா ளர் மற்றும் அடிப்படை ஊழி யர் சங்கத்தின் மாநில அளவிலான &nbsp;கூட்டம் கோவை தாமஸ் கிளப்பில் சனியன்று நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.ரவி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் பி. நடராஜன் கூட்டத்தை துவக்கி வைத்து உரை யாற்றினார். &nbsp;இதில், தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வரும் ஒப் பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.15,000 வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் பிபிசி &nbsp;(BBC), சிஓஇ (COE) பயிற்றுநர்கள் மற்றும் &nbsp;உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் &nbsp;வழங்க வேண்டும். 2005 ஆம் ஆண்டு பணி யமர்த்தப்பட்ட பணிமனை மற்றும் பண்டக உதவியாளர்களின் பணிக்காலத்தை முறைப் படுத்த வேண்டும். தொழிற்நுட்பப் பிரிவில் &nbsp;நீண்டகாலமாக காலியாக உள்ள பணியிடங் களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தின் நிறைவாக தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க மாநிலத் தலைவர் எம்.சீனிவாசன் உரையாற்றினார். நிறைவில் செல்வி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram