ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்பிடுக!
2 Jun 2026, 10:29 pm

ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்பிடுக!

ஈரோடு, ஜூன் 2- மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களிடம் நேர் காணலை நடத்தி, காலதாமதம் இன்றி உடனடியாக ஊராட்சி செய லாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் மாநிலக் குழு கூட்டம் மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் கு.பாலமுரளி தலைமை வகித்தார்.

மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்திக், மாநிலப் பொரு ளாளர் சந்துரு, மாநில துணை நிர்வா கிகள் அபிராமி, கோ.அரவிந்த்சாமி உட்பட மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு: முடங்கிப் போகும் கிராம ஊராட்சிப் பணிகள் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில், கடந்த 2025 அக்டோபரில் 1400-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களுக்கான அறி விப்பு வெளியிடப்பட்டது.

அரசா ணையின்படி விண்ணப்பங்கள் பெறப் பட்டு, 7000 பேர் நேர்காணலுக்குத் தயாராக இருந்த நிலையில் நிர்வா கக் காரணங்களால் அது ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர், இது தொடர் பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, பிப்.24, 2026-க்குள் நேர்காணல் நடத்தி பணி ஆணைகள் வழங்க உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகும் நேர்காணல் நடத்தப்படாத நிலை யில், சில ஊராட்சி மன்றத் தலைவர் கள் நேரடியாக ஊராட்சி செயலாளர் களைத் தேர்வு செய்யக் கோரி நீதி மன்றத் தடை ஆணை பெற்றனர்.

இதற்கிடையே, கடந்த மே மாதத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஊரக வளர்ச்சித் துறை இணையதளத்தி லிருந்து இப்பணி தொடர்பான தக வல்கள் அனைத்தும் நீக்கப்பட்டு உள்ளது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற் போது ஊராட்சி மன்றத் தலை வர்களின் பணிக்காலமும் நிறைவ டைந்த சூழலில், காலிப் பணியிடங் கள் நிரப்பப்படாததால் கிராம ஊராட்சிப் பணிகள் முற்றிலும் முடங்கிக் கிடக்கின்றன.

மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே தகுதி யானவர்களுக்குப் பணி வாய்ப்பு கிடைக்கும்.

எனவே, ஜூன் 17 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தமிழக அரசு மதிப்பெண் அடிப்படையிலான தேர்வு முறையை உறுதி செய்து, உடனடியாக நேர்காணலை நடத்தி இப்பணியிடங்களை நிரப்ப வேண் டும்.

மின்சார வாரியத்தில் 36 ஆயிரம் காலிப் பணியிடங்கள் தமிழகம் முழுவதும் மின்சார வாரியத்தில் 36,000 காலிப் பணி யிடங்கள் உள்ளன. கள உதவியா ளர் பணியிடங்களுக்காக கடந்த 2025 நவம்பரில் டிஎன்பிஎஸ்சி நடத்திய எழுத்துத் தேர்வில் 9,600 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆனால், தற் போது 1,796 நபர்கள் மட்டுமே நிரப்பப்படுவார்கள் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது ஏமாற்ற மளிக்கிறது. பணியாளர்கள் பற்றாக்குறை யால்தான் மின்வெட்டு மற்றும் விபத்து கள் ஏற்படுவதாக அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார்.

எனவே, மின்வாரி யத்தில் காலியாக உள்ள 36,000 பணி யிடங்களையும் நிரப்ப வேண்டும். முதற்கட்டமாக, கள உதவியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 9,600 பேருக்கும் வேலை வழங்க வேண்டும்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு பணிச் சேர்க்கை நடப்பதாலும், பெண் களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு உள்ளதாலும், உடல் தகுதித் தேர்வில் கம்பம் ஏறுவதற்கு ‘சிறப்புக் கருவி கள்’ (Special Tool) பயன்படுத்து வது போன்ற சில தளர்வுகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என வாலி பர் சங்க மாநிலக் குழு வலியுறுத்தி யுள்ளது.